பதினோரு பேருடன் "வில்லு"

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது ஒருநாள் நண்பர்கள் அழைக்க, பொங்கல் ரிலீஸ் ஏதாவது படம் பார்க்கலாம் என்ற எண்ண‌த்தில் அம்பாசமுத்திரம் அருகே ஒரு தியேட்டரில் இரவுக்காட்சியாக 'வில்லு' பார்க்க முடிவாகியது. இரவு இரண்டாவது காட்சி ஏன்? அப்போதுதானே மாலையில் 90 போட்டுவிட்டு தாமதமாக வீடு செல்ல வசதியாக இருக்கும்.

திட்டப்படி 90 அடித்துவிட்டு 'ராஜா புரோட்டா ஸ்டாலில்' நாலு புரோட்டா ஆம்லெட்டுடன் 'சால்னா'வில் ஊற வைத்து வெட்டிவிட்டு.. (சென்னையில் புரோட்டா சாப்பிடுவதில்லை என சாணியடி சித்தர் மீது சத்தியம் செய்திருக்கிறேன். மீறி என்னை சாப்பிடவைக்கவேண்டும் என நீங்கள் நினைத்தீர்களானால் என்னை ஒரு கொலைகாரனாகத்தான் நீங்கள் பார்க்கவேண்டிவரும்).. நல்லபடியாக தியேட்டருக்கு வந்து சேர்ந்தோம்.

தியேட்ட‌ரிலிருந்து ஒரு சிறிய‌ கும்ப‌ல் அதிர்ச்சிக‌ர‌மாக‌ வெளியேறி ஓடிக்கொண்டிருந்த‌து. அட‌டா.. என்ன‌டா இது, ஒரே வெட்டு குத்து.. வ‌ன்முறை, வெடிகுண்டுக்க‌லாச்சார‌ம், ந‌ம்ப‌ ஊரு பேரையே கெடுக்குறாங்க‌ளேன்னு என‌க்கு வ‌ருத்த‌மாப்போச்சுது. டிக்கெட் சாள‌ர‌ம் அருகே சென்று 'ஏன் டிக்கெட் எடுக்க நின்னவர்களெல்லாம் இப்பிடி ஓடுறாங்க.. என்ன பிரச்னை அண்ணாச்சி?' விசாரித்த‌போதுதான் புரிந்த‌து.. அவ‌ர்க‌ள் டிக்கெட் எடுக்க‌ நின்ற‌வ‌ர்களில்லை எனவும், முத‌ல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வ‌ந்த‌வ‌ர்க‌ள்தான் அப்ப‌டி ஓடுவ‌தாகவும் தெரிந்த‌து. இதைப்பார்த்து டிக்கெட் எடுக்க‌க் காத்திருந்த ஏழெட்டுப்பேர் நைஸாக‌ ந‌ழுவுவ‌தைக் க‌வ‌னித்தேன். எனக்கும் உள்ளூர உதறலெடுத்தாலும் நண்பர்களுக்கிடையே அதைக்காட்டிக்கொள்ளாமல் தைரியமாக இருப்பதாக காட்டிக்கொண்டேன். மேலும் தயங்கிய இருவரை "என்னடா இது.. குருவி, குசேலன், ஏகன் இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து மனதைக் கல்லாக்கி வைத்திருக்கும் நாம் ஏனடா இந்தப் படத்தைப் பார்க்க‌ பயப்பட வேண்டும்? எதையும் தாங்கும் இதயமடா நமது" என வீர உரையாற்றி தேற்றினேன். அப்போது எனக்குத் தெரியவில்லை, தியேட்டருக்கு உள்ளே என் நண்பர்கள் கைகளாலேயே ஒரு மண்டகப்படி காத்திருக்கிறது என.



டிக்கெட்டுக்காக காத்திருந்தவர்களை எண்ணிப்பார்த்தேன். எங்க‌ளையும் சேர்த்து எண்ணிப்பார்த்த‌போது மொத்த‌ம் ஆறுபேர்தான் இருந்தோம். ப‌ட‌ம் கேன்ச‌ல் செய்ய‌ப்ப‌ட்டுவிடுமோ என‌ த‌ய‌ங்கினேன். என் துரதிருஷ்டம், அந்த‌ ந‌ல்ல‌ செய‌ல் ந‌டைபெறாம‌லே போய்விட‌ தியேட்ட‌ருக்குள் சென்று அம‌ர்ந்தோம். ப‌ட‌ம் துவ‌ங்கிய‌போது த‌லைக‌ளை எண்ணிப்பார்த்தேன். ச‌ரியாக‌ 11 பேர். இடைவேளையில் எந்த‌ப்பேச்சுவார்த்தையும் இல்லாம‌ல் கொலைவெறிப்பார்வையில் என்னை பார்வையாலேயே வ‌றுத்தன‌ர். இடைவேளைக்குப்பின் வ‌ந்த‌ ஒரு ச‌ண்டைக்காட்சியில் தியேட்ட‌ருக்குள்ளும் ஒரு ம‌னித‌னுக்கு சில‌ குத்துக‌ள் விழுந்த‌தைக் க‌வ‌னிக்க‌ அங்கு யாருமேயில்லை. அதோடு கிள‌ம்பி வீட்டுக்குப் போய், 'பாதியில் எழுந்து வ‌ந்த‌ ப‌ட‌வ‌ரிசை'யில் நான்காவ‌தாக 'வில்லு'வை சேர்க்க‌த் த‌டையாக‌ நாங்க‌ள் ம‌துவ‌ருந்தியிந்தோம்.

என் வாழ்க்கையில் நான் ம‌துவ‌ருந்திய‌த‌ற்காக‌ இர‌ண்டாவ‌து முறையாக‌ வ‌ருந்தினேன்.


.



52 comments:

எவ்வள்வு சொல்லியும் கேட்கலைன்னா இப்படித்தான் அடி கிடைக்கும்..

 

/ /எங்க‌ளையும் சேர்த்து எண்ணிப்பார்த்த‌போது மொத்த‌ம் ஆறுபேர்தான் இருந்தோம். ப‌ட‌ம் கேன்ச‌ல் செய்ய‌ப்ப‌ட்டுவிடுமோ என‌ த‌ய‌ங்கினேன். என் துரதிருஷ்டம், அந்த‌ ந‌ல்ல‌ செய‌ல் ந‌டைபெறாம‌லே போய்விட‌ தியேட்ட‌ருக்குள் சென்று அம‌ர்ந்தோம். ப‌ட‌ம் துவ‌ங்கிய‌போது த‌லைக‌ளை எண்ணிப்பார்த்தேன். ச‌ரியாக‌ 11 பேர். //

மீதி ஐந்து பேர் சுண்டல் விக்குறவனும், கூட்டி பெருக்குறவனுமா?

கேபிள் சங்கர் விமர்சனம் படித்துவிட்டும் படத்திற்கு போயிருக்கீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே ரொம்ப நல்லவரு!!!!

 

// மாலையில் 90 போட்டுவிட்டு தாமதமாக வீடு செல்ல வசதியாக இருக்கும். //

இதுக்கு பதிலா இனொரு குவாட்டர் அடித்திருக்கலாம்!

 

ஷங்கர் Shankar said...

// மாலையில் 90 போட்டுவிட்டு தாமதமாக வீடு செல்ல வசதியாக இருக்கும். //

இதுக்கு பதிலா இனொரு குவாட்டர் அடித்திருக்கலாம்!//

ரொம்ப சுலபமாக சொல்லிவிடுகிறீர்கள் திரு. ஷங்கர்.

முடிந்தால் படியுங்கள்
http://amirdhavarshini.blogspot.com/2009/01/blog-post_27.html

மேற்கூறிய லின்க் இங்கே தர ஒரு அவசியம் / நோக்கம் இருக்கிறது.

 

சந்தோஷமா???? நல்ல இருங்கப்பா.. உங்கள எல்லாம்...

// டிக்கெட் சாள‌ர‌ம் அருகே சென்று 'ஏன்//

இதுல ஏதும் உள்குத்து இல்லையே??????

 

நன்றி கேபிள்.!
நன்றி ஷங்கர்.!

நன்றி அமித்து அம்மா.! (உங்கள் அன்புக்கு நன்றி தோழி.! உங்கள் பதிவைக்கண்டேன். வரவேற்புக்குரியது. எனது பதிவுகளில் '90 அடிப்பது' குறித்து வரும் சம்பவங்களில் பெரும்பான்மையானவை கற்பனையே. நான் மிக ஒழுக்கம் என்று சொல்ல வரவில்லை, அதே சமயம் இது போன்ற குறிப்புகள் நகைப்புக்காகவே பயன்படுத்தப்படுவதை அறிவீர்கள் என நம்புகிறேன். மேலே நண்பர் ஷங்கர் குவார்ட்டர் என குறிப்பிட்டதும் அந்த நோக்கில்தான் என நான் கொள்கிறேன்)

 

நன்றி கார்க்கி.! (இந்தப்பதிவு எழுதும் போதே உன்னை நினைத்துதான் நான் சிரிப்பாய் சிரித்தேன்.. ஹஹா..ஹிஹா..)

 

என்னால டிவில ரெண்டு ஸீன்கூட பார்க்கமுடியல. இடைவேளை வரை பார்த்திருக்க உங்க மனதைரியத்தை பாராட்டி அடுத்த விஜய் படத்துக்கு உங்களுக்கும் ரமாவுக்கு ஸ்பெஷல் டிக்கெட் தரப்படூம்:)

 

எனக்கு வந்த எஸ்.எம்.எஸ்

ஆயுள் காப்பீட்டு கழகத்தின் இறுதிகட்ட எச்சரிக்கை!
வில்லு பார்ப்பது தற்கொலைக்கு சமமாக கருதப்படுகிறது. மீறி பார்ப்பவர்களுக்கு இன்சூரன்ஸ் க்ளைம் ஆகாது என்பதௌ தெரிவித்து கொள்கிறோம்!


எப்படியெல்லாம் பீதியை கிளப்புறாங்க!

 

:-)))

//சென்னையில் புரோட்டா சாப்பிடுவதில்லை என சாணியடி சித்தர் மீது சத்தியம் செய்திருக்கிறேன்.//

ஏன் அப்படி??

 

பிரபல பதிவர்கள் எல்லாம் வில்லு படத்த பார்காதீங்க, பார்காதீங்கன்னு தலையால அடிச்சுகிட்டாங்களே...

மத்தவங்க சொன்னா கேட்கணும்.. இல்லன்ன இது மாதிரி பட்டுதான் தெரிஞ்சுக்கணும்

 

// மேலே நண்பர் ஷங்கர் குவார்ட்டர் என குறிப்பிட்டதும் அந்த நோக்கில்தான் என நான் கொள்கிறேன் //

ஆமாம்! நானும் காமெடிக்காக தான் சொன்னேன்

 

தாமிரா.. அருமையான நடை.. 90 போட்டும்

 

வித்யா said...

என்னால டிவில ரெண்டு ஸீன்கூட பார்க்கமுடியல. இடைவேளை வரை பார்த்திருக்க

திருட்டு சி.டி.யில்கூட குருவி பார்ட் - 1, பார்ட் - 2ன்னு (வில்லு) விற்கிறார்கள் பெங்களூரில்.

 

அப்படியே பாபநாசத்திற்கு போய் ஒரு குளியல் போட்டிருந்தால் வில்லு பார்த்த பாவம் போய் இருக்கும் தாமிரா...
சரி விடுங்க...நடந்தது நடந்து போச்சு?

 

இராகவன் நைஜிரியா said...

பிரபல பதிவர்கள் எல்லாம் வில்லு படத்த பார்காதீங்க, பார்காதீங்கன்னு தலையால அடிச்சுகிட்டாங்களே...

மத்தவங்க சொன்னா கேட்கணும்.. இல்லன்ன இது மாதிரி பட்டுதான் தெரிஞ்சுக்கணும்

தியேட்டர்ல பதினோரு பேரு மட்டும் இருக்குறப்பவே உஷாரயிருக்கணும்

 

Present sir..

Please Make a visit to:

http://naiyaandinaina.blogspot.com/2009/01/blog-post_4310.html.

 

தண்ணியடிச்சுட்டு போய்க் கூட பாக்க முடியலைன்னா அது ஒரு காவியமாத்தான் இருக்கணும். :)))

 

நான் இன்னும் பாக்காம தப்பிச்சுக்கிட்டே இருக்கேன். கடவுள்தான் காப்பாத்தணும்.

 

ரொம்பவே தில்லு

 

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!..

 

// சந்தனமுல்லை said...
:-)))

//சென்னையில் புரோட்டா சாப்பிடுவதில்லை என சாணியடி சித்தர் மீது சத்தியம் செய்திருக்கிறேன்.//

ஏன்னா அதுக்கு சாணியே திங்கலாம்! அதான்:-))

 

ஈழ தமிழரை காக்க ஒரு பதிவிடுங்கள் ....
போரை நிறுத்த ஒரு குரல் கொடுங்கள் ....
நன்றி ...

 

வில்லுன்னாலா பயமாக்கீது

இதுல 11 பேரா ...

 

நாலு புரோட்டா ஆம்லெட்டுடன் 'சால்னா'வில் ஊற வைத்து வெட்டிவிட்டு\\

ச்சே என்னா இரசணைப்பூ

 

/முரளிகண்ணன் said...
ரொம்பவே தில்லு//

:((((.. ஏன் தல?

 

\\டிக்கெட் சாள‌ர‌ம் அருகே சென்று 'ஏன் டிக்கெட் எடுக்க நின்னவர்களெல்லாம் இப்பிடி ஓடுறாங்க.. என்ன பிரச்னை அண்ணாச்சி?' \\

உள் குத்துக்கேவா ...

 

108 அறிவுரை.

....) வில்லு பார்க்காதீங்க.

 

நன்றி வித்யா.! (உங்க மனதைரியத்தை பாராட்டி//// சோப்பு டப்பா குடுத்தாலாவது பிரயோஜனப்படும்)

நன்றி வால்.! (SMS ரசித்தேன்)

நன்றி முல்லை.! (உங்களுக்கு என்ன பதில் சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருக்கும்போதே கீழே அபி அப்பாவின் ROTFL கமெண்ட்டைக்கண்டேன். இதை விட சிறப்பாக என் மனதில் இருப்பதை கூறிவிடமுடியாது)

நன்றி ராகவன்.! (ஆமாங்க..:(((

நன்றி நர்சிம்.! (கோவமா இருக்காப்புல இருக்குது..)

நன்றி ஆனந்த்.! (கரெக்டா புடிச்சீங்க பாஸ்.. அடுத்த பதிவு பாபநாசம் போன கதைதான்)

நன்றி நைனா.! (நீங்க மட்டும் தப்பிச்சுட்டீங்களே.. அவ்வ்..)

நன்றி மகேஷ்.! (அது ஒரு காவியமாத்தான் இருக்கணும்// ROTFL..)

நன்றி அம்மிணி.! (கவனம், ஜாக்கிரதை.!)

நன்றி முரளி.!
நன்றி ராம்.!
நன்றி ச்சின்னவர்.!

நன்றி அபிஅப்பா.! (நீண்ட நாட்களுக்குப்பின்னர் வந்தாலும் ROTFL கமென்ட்.. பக்கம் பாராமல் சிரித்தேன்)

நன்றி சதீஷ்.! (நிச்சயம் எழுதுவோம் தோழரே..)

நன்றி ஜமால்.! (செங்கோட்டை பார்டர் கடையில் புரோட்டா சாப்பிட்டிருக்கீங்களா.?)

 

//சென்னையில் புரோட்டா சாப்பிடுவதில்லை என//

ஏன் அப்படி!!!!!!!!!1

/ப‌ட‌ம் துவ‌ங்கிய‌போது த‌லைக‌ளை எண்ணிப்பார்த்தேன். ச‌ரியாக‌ 11 பேர்//

சரியா கவுண்ட் பண்ணீங்களா...ஏன்னா 90 அடிச்சதுல உங்க தலைய வுட்டுட்டீங்களோன்னுதான்....! என்ன இருந்தாலும் ஒரு புள்ளி விவரம் கொடுக்கும்போது தப்பாயிடக்கூடாது பாருங்க

 

கடைசில நீங்களும் வில்லு பார்த்துட்டீங்க...இவ்ளோ பேர் விமர்சனம் போட்டும் எப்படி படம் பார்க்கற தைரியம் வந்துச்சோ? ஒருவேளை அதான் "தங்கமணி தாமிராவோட ஸ்பிரிட்டோ?!
thats the spirit !!!:):):)

 

கடைசில நீங்களும் வில்லு பார்த்துட்டீங்க...இவ்ளோ பேர் விமர்சனம் போட்டும் எப்படி படம் பார்க்கற தைரியம் வந்துச்சோ? ஒருவேளை அதான் "தங்கமணி தாமிராவோட ஸ்பிரிட்டோ?!
thats the spirit !!!:):):)

 

கல்யாணியா? அபிராமியா? இல்ல பாலாஜி??


எந்த தியேட்டர்ல பாத்தீங்க/

 

ஏத்திக்கிடதெல்லாம் இறங்கிடிச்சாக்கும்? எந்த தியேட்டர்ல ஓடுதுங்க? அம்பை அபிரமியிலா??

 

பொட்டல்புதூர் ஏ ஒன் ஹோட்டலுக்கு போனீங்களா?

 

aanalum ungalukku romga thairiam
;-)))

 

அத்திரி said...
பொட்டல்புதூர் ஏ ஒன் ஹோட்டலுக்கு போனீங்களா?
//
ஏ ஓன் போகாமால இருப்பாரு?

 

அப்ப வில்லு படம் அவ்வள்வுதானா...!!! நடிகர் திரு விஜய் அவர்களுக்கு நீச்சயமாக இது ஒரு நல்ல பாடம்...இனிமெலாவது நல்ல கதை கேட்டு நடீக்கட்டும்....

 

அவசியம் தங்களின் கருதுக்கள் வரவேர்க்கபடுகிறது...

 

//நாலு புரோட்டா ஆம்லெட்டுடன் 'சால்னா'வில் ஊற வைத்து வெட்டிவிட்டு//

முட்டை புரோட்டான்னு டைரட்டா சொல்லாம ஏன்யா இப்படி சால்னாவைக் குழப்புற மாதிரி குழப்பிச் சொல்லி உயிரெடுக்கிறீங்க!

மதுவருந்தியதற்காக வருந்துகிறேன்னு தெளிவா தப்பா சொல்றீங்க. அதனாலதான் அடிவாங்கும்போது வலி கம்மியா இருந்தது - இல்லையா?

வில்லு பாக்குற புலி புல்லு திங்கும்!

 

//ஏன்னா அதுக்கு சாணியே திங்கலாம்! அதான்:-))//

ஹாஹா.. அதானே! மதுரைய கம்பேர் பண்ணினா எந்த ஊரு புரோட்டாவும் வறட்டிதான்! :-))

 

\\ /முரளிகண்ணன் said...
ரொம்பவே தில்லு//

:((((.. ஏன் தல?

\\

கார்கி கூல்.
இதில் உள்ள உள்குத்து புரியவில்லையா?

 

உங்களை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு..

 

உங்களுக்கு ரொம்ப தைரியம்,இவ்வளவு விமர்சனம் படிச்சிட்டும் ஒருத்தர் போறார்ன்னா அவரை என்னான்னு சொல்றது

 

/Saravana Kumar MSK said...
உங்களை பார்த்தா எனக்கு பாவமா இருக்கு../

Repeatuuuuuuuuu ;)

 

ஆகா என்ன கூட்டம்.. இதுபோல எல்லா பதிவுக்கும் வந்தா எப்பிடியிருக்கும்.?

நன்றி ராஜ்.! (பின்னூட்டங்களை படிக்கிறதில்லையா?)

நன்றி மிஸஸ்.!
நன்றி அத்திரி.! (தியேட்டர எல்லாம் சொல்ல முடியாதுங்க..)
நன்றி விஜய்.!
நன்றி இயற்கை.!
நன்றி ஆனந்த்.! (பொட்டல்புதூர் ஏ ஒன் போனதில்லைங்க.. அடுத்த தபா டிரை பண்ணுறேன்)
நன்றி ஷர்மா.!
நன்றி இராம்.!
நன்றி சுந்தர்.! (செங்கோட்டை பார்டர் கடைக்கு முன்னால் மதுரை தேறுமான்னு தெர்ல.. தெரிஞ்சவிங்க சொல்லலாம்)
நன்றி சரவணா.!
நன்றி பாபு.!
நன்றி ஸ்ரீமதி.!

 

/நன்றி சுந்தர்.! (செங்கோட்டை பார்டர் கடைக்கு முன்னால் மதுரை தேறுமான்னு தெர்ல.. தெரிஞ்சவிங்க சொல்லலாம்)//

அண்ணே,


நீங்க சொல்லுற கடையிலே குற்றாலம் போனப்போ சாப்பிடதா ஞாபகம்... :)

குற்றாலம் பக்கத்திலே தான் செங்கோட்டை இருக்கு... ஹி ஹி எல்லாமே மறந்துட்டே வருது....

மதுரையிலே முட்டை பொரட்டா சாப்பிட்டு இருக்கீங்களா? முட்டை தம் சாப்பிட்டு இருக்கீங்களா??? ஹிம் சிங்கப்பூரூலே ஒக்கார்க்கிட்டு "களா... களா'னு தான் கேட்டுக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு.. ஊருக்குள்ளே இருந்து போயி தின்னுட்டு வந்து அதொட எழுதியிருக்கலாம்... :)