யாரோ ஒருத்தி

நீ என்னுள்ளே விட்டுச்சென்ற
தடயங்கள் அத்தனையும் காற்றிலே
உடைந்து போய்விட்டன.. மீதம் ஏதுமில்லை
சாட்சிகளே இல்லாமல் பரிதாபமாக.. நம் காதல்.!

********

உன் கணவனுடன்
பேசிக்கொண்டிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்ட போது
நீ பதற்றமடைவாயோ
என்று நினைத்து நினைத்தே
நான் பதற்றமடைந்தேன்.

********

மழை
பூக்கள்
கடல்
மரங்களடர்ந்த ரயிலடி
இவற்றைப்போலவே
இயற்கை என்ற வரையறையைத்தாண்டிய
கூடுதல் ஒன்று உன்னிடமும் உள்ளது.!

********

யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.!

.

39 comments:

//உன் கணவனுடன்
பேசிக்கொண்டிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்ட போது
நீ பதட்டமடைவாயோ
என்று நினைத்து நினைத்தே
நான் பதற்றமடைந்தேன்./

:-))

அநியாயத்துக்கு பயமுறுத்தியிருக்கீங்க.. ஆனா இதை வேற மாதிரி எங்கயோ படிச்ச ஞாபகம் இருக்குது!

 

//நீ பதட்டமடைவாயோ
என்று நினைத்து நினைத்தே
நான் பதற்றமடைந்தேன்.
//

//இயற்கை என்ற வரையறையைத்தாண்டிய
கூடுதல் ஒன்று உன்னிடமும் உள்ளது//

அட..!


அனைத்துமே அருமை ஆதி.

 

அருமை அண்ணே

 

அருமை ஆதி...
என்னோட சாய்ஸ் 2ம்,3ம்...
2வது இப்பக்கூட அனுபவப்பட்டேன்.. ஆனால் தோழி விஷயத்தில்...
முதல் கவிதை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கு... ,மீள் பதிவா...?

 

நாளைக்கு வர்ற சண்டையை இன்னிக்கே இழுத்திருவீங்க போல‌


வாங்க பக்கத்து வீட்டுக்கு


http://www.ensaaral.blogspot.com/

 

//உன் கணவனுடன்
பேசிக்கொண்டிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்ட போது
நீ பதட்டமடைவாயோஎன்று நினைத்து நினைத்தே
நான் பதற்றமடைந்தேன்.//

பதட்டமடைவதும் பதற்றமடைவதும் வேறு வேறா?

 

//பதட்டமடைவதும் பதற்றமடைவதும் //

எதற்காக?? மீரா ஜாஸ்மீன் அவுங்கதானா??? கவிதை சூப்பர்,..

 

//ராஜா | KVR said...

//உன் கணவனுடன்
பேசிக்கொண்டிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்ட போது
நீ பதட்டமடைவாயோஎன்று நினைத்து நினைத்தே
நான் பதற்றமடைந்தேன்.//

பதட்டமடைவதும் பதற்றமடைவதும் வேறு வேறா?
//

எல்லாம் ஒரு வித பதட்டத்துல வரதுதான் நீங்க இன்னும் பதற்றத்தை கிளப்பிடுவீங்க போலிருக்கே :))))))

 

//இயற்கை என்ற வரையறையைத்தாண்டிய
கூடுதல் ஒன்று உன்னிடமும் உள்ளது//

நெற்றிக்கண்தானே அது???

 

//மழை
பூக்கள்
கடல்
மரங்களடர்ந்த ரயிலடி
இவற்றைப்போலவே
இயற்கை என்ற வரையறையைத்தாண்டிய
கூடுதல் ஒன்று உன்னிடமும் உள்ளது.!///

இதை விட, ஹை எண்ட்ல போய் வர்ணிக்கவே முடியாது சூப்பரூ :))

 

//யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.!///

:-(

:-)

முன்னது சோகம் பின்னது பழைய காதலியை பார்த்த சந்தோஷம்ன்னு எடுத்துக்காதீங்க :))))

 

வணக்கம் ஆதி

அட்டகாசம்....

இராஜராஜன்

 

2, 4 - வலி அனுபவிக்கும் நிமிடங்கள்.:(

 

அட்டகாசம் ஆதி

 

//மழை
பூக்கள்
கடல்
மரங்களடர்ந்த ரயிலடி
இவற்றைப்போலவே
இயற்கை என்ற வரையறையைத்தாண்டிய
கூடுதல் ஒன்று உன்னிடமும் உள்ளது.!///

இப்பிடி சினிமா பாட்டுகூட ஒன்னு இருக்கே


""எந்த பெண்ணிலும்
இல்லாத ஒன்றரை
அது ஏனோ
உன்னிடம் இருக்கிறது""

:)))))

 

//உன் கணவனுடன்
பேசிக்கொண்டிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்ட போது
நீ பதட்டமடைவாயோ
என்று நினைத்து நினைத்தே
நான் பதற்றமடைந்தேன்./

ஏன் கந்துவட்டி கோயிந்தா????

 

//யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.!//

எவனோ ஒருவன் எனக்கு
தாலி கட்டப்போகிறான்
வாழ்த்துவதற்காக
மனைவியுடன் வந்திருக்கிறாய் நீ.!

தாலிய கட்டுறவரு மட்டும் தான் கவுஜ எழுதணுமா?

 

யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.!

I feel sorry for that Yaaro oruthi.
:-(

Gowri

 

ஆதி,

நல்ல கவிதைகள். அதிலும் கடைசி கவிதை ஒரு சின்ன சிறுகதை..

 

முதல் கவிதையை தவிற மிச்ச மூன்றும் நல்லா இருக்கு.

 

நல்லா இருக்கு.

 

உள்ளேன் ஐயா

 

எதிர்பார்த்த ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.
DRY.

 

யாரோ ஒருத்திக்கு
தாலிகட்டப்போகிறேன் நான்
வாழ்த்துவதற்காக
கணவனுடன் வந்திருக்கிறாய் நீ.!
//

:-)))

கலக்கீட்டீங்க...

 

ம்..ம்ம்..ம்ம்ம்.

 

ஹ்ம்ம்.. நல்லா இருக்கு...

 

//நீ என்னுள்ளே விட்டுச்சென்ற
தடயங்கள் அத்தனையும் காற்றிலே
உடைந்து போய்விட்டன.. மீதம் ஏதுமில்லை
சாட்சிகளே இல்லாமல் பரிதாபமாக.. நம் காதல்.!
//

அழகான வார்த்தைகள்.. ஆனா தடயம் இருந்தா எத்தன டைம்-பாஸ் காதல் விபரீதமான முடிவுக்குப் போகும்?

நேரம் இருந்தா நம்ம பக்கம் வந்துட்டுப் போங்க :)

www.senthilinpakkangal.blogspot.com

 

கவிதை அழகா இருக்கு...

ஆனா ஏதோ குறைய மாதிரி ஒரு ஃபீல்..

 

அனைத்துமே அருமை.

 

சென்ஷி (எனது முதல்முத்தம் பதிவில் ஏற்கனவே போட்டுவிட்டேனோ என்னவோ?), இலக்கியன், அத்திரி, செல்வா, தமிழ்பறவை, சின்னாம்மிணி, ஸ்டார்ஜன், ராஜா (மாற்றிவிட்டேன் தோழர்), ஜோதி, ஆயில்யன், ராஜராஜன், மணிநேரன், முரளி, மங்களூர்சிவா (எந்த பெண்ணிலும்
இல்லாத ஒன்றரை// ரசித்தேன்), கௌரி, அருணா, வெண்பூ, முத்துராமலிங்கம், டிவிஆர், தராசு, கும்க்கி, வேத்தியன், தமிழன்கறுப்பி, நர்சிம், கடைக்குட்டி, செந்தில்வேலன் (எல்லோர் கடைகளுக்கும் போகணும் என்று ஆசைதான் நண்பரே, நேரமின்மையால் இந்தக்கடையே காத்தாடிக்கொண்டிருக்கிறது. நிச்சயம் வருகிறேன்), செய்யது, கார்க்கி, தமிழ்பிரியன், வித்யா, பட்டாம்பூச்சி..
.. அனைவருக்கும் நன்றி.

கொஞ்சம் பிஸியாக இருந்ததால் உடனுக்குடன் வந்து லைவ்வாக பதில் சொல்ல முடியவில்லை.. ஜாரி.!

 

நல்லாருக்கு கவிதைகள்!

 

//ஆயில்யன் said...

//ராஜா | KVR said...

//உன் கணவனுடன்
பேசிக்கொண்டிருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்ட போது
நீ பதட்டமடைவாயோஎன்று நினைத்து நினைத்தே
நான் பதற்றமடைந்தேன்.//

பதட்டமடைவதும் பதற்றமடைவதும் வேறு வேறா?
//

எல்லாம் ஒரு வித பதட்டத்துல வரதுதான் நீங்க இன்னும் பதற்றத்தை கிளப்பிடுவீங்க போலிருக்கே :))))))
//

LOL!