சனிக்கிழமை காலை. அவசரமாக ஒரு நண்பரை காணக் கிளம்பிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் கிச்சனுக்கும் ஹாலுக்கும் இடையே ஒரு குட்டி அறை உள்ளது (டைனிங் ஹாலெல்லாம் இல்லை. சும்மா ஒரு அறை, அவ்வளவுதான்). அதில்தான் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் வகையறாக்கள் வைத்திருக்கிறோம். அந்த அறையில் வலப்புறம்தான் பாத்ரூம் உள்ளது.
இங்கே ஹாலில் சுபா மற்றும் ரமாவின் உணவு நேர போராட்டம் நடந்துகொண்டிருந்தது. சாப்பாடு மற்றும் உணவுப்பாத்திரங்களுக்கு நடுவே சுபாவை வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து தயிர் கிண்ணத்தை (கொஞ்சம் பெரிது, ஏனெனில் வீட்டில் பெரும்பாலும் தயிர்சாதமும் ஊறுகாயும்தான் உணவு. ஹிஹி..) எடுத்துவருவது சிரமமாகையால் ரமா என்னை எடுத்துத்தருமாறு பணித்தார். என் அவசரத்தில் 'என்ன விளையாடுறியா, ஓடிருங்க ரெண்டுபேரும்' என்று கடிந்து சொல்லிவிட்டு என் வேலையைப் பார்க்கத்துவங்கினேன். சண்டை போட அவருக்கும் நேரமில்லாததால் அவரே எழுந்து கிச்சனுக்குள் நுழைந்து தயிரை எடுக்க விரைந்தார். அதற்குள் எங்கோ இவனை விட்டு விட்டு கிளம்பிவிட்டார் என நினைத்தானோ என்னவோ சுபா அவரைத் தடுக்கும் வண்ணம் 'யீயீயீயீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்' என அழத்துவங்கியிருந்தான். தயிரை எடுத்துக்கொண்டு 'ஏம்ல உயில வாங்குத, இங்கனதான நிக்கேன்' என்று கூறிக்கொண்டே விருட்டென திரும்பினார். நான் அந்த நேரத்தில் சரியாக பாத்ரூம் போக அந்த அறைக்குள் நுழைந்தேன். நாங்கள் இருவரும் மிக மிக லேசாக தோளோடு தோள் உரசிக்கொண்டோம். அவ்வளவுதான், மிக லேசாக விளிம்பை பிடித்திருந்தாரோ என்னவோ பாத்திரம் கை நழுவியது. ஹைய்ய்ய்யோ.. அறை முழுதும் தயிராபிஷேகம்.
அடுத்த விநாடியே உச்சஸ்தாயியில் கத்தினார், "ஏங்க.. கொட்டிவிட்டீங்க?"
"அய்யய்யோ, பச்சைப்பொய்யி" என்று நான் பதிலுக்கு அலறினேன். அதற்குள் ஹாலில் சுபா அவனால் முடிந்த சேவையாய் ஊளையிட்டுக்கொண்டே வாட்டர் ஜக்கை கொட்டிவிட்டிருந்தான். அந்த எரிச்சல், நான் எடுத்துத்தராத கோபம், லீவு நாளில் நான் மட்டும் வெளியே கிளம்பும் கோபம் என அனைத்தும் சேர்ந்து பழி என் மீது விழுவது புரிந்தாலும் இதெல்லாம் அரசியலில் சகஜம். அடுத்தடுத்த வசனங்களிலேயே இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
"அடியேய், நான் கொட்டாமலேயே இப்படி பழி போடுறயே, நான் மட்டும் கொட்டியிருந்தேன்னா என்ன பண்ணியிருப்பே?" என்றேன். அதற்கு அப்புறம் அவர் சொன்னதைக் கேட்டுவிட்டுதான் பதில் பேச இயலாமல் நான் கிளம்பும் வழியைப் பார்க்க ஆரம்பித்தேன்.
சிரிக்காமலே சொன்னார், "நான் வர்றது தெரிஞ்சாவே நீங்க ஒதுங்கிப்போவ வேண்டியதுதான?"
.
.
66 comments:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவன்
உலவு.காம்
நன்றி உலவு, தங்கள் சேவைக்கு வாழ்த்துகள், நன்றிகள்.!
சம்சாரம்... சமரசம்... சரசம்... ஹி ஹி...
//"அடியேய், நான் கொட்டாமலேயே இப்படி பழி போடுறயே, நான் மட்டும் கொட்டியிருந்தேன்னா என்ன பண்ணியிருப்பே?"//
உண்மையாலுமே இப்படி தைரியமா கேட்டியா தலைவா??
எங்க சத்தியமா சொல்லு, நெஞ்சத் தொட்டு சொல்லு.
இத்தனி களேபரத்துலயும் அண்ணிய அவர் இவர்னு இன்னா மரியாதைப்பா,
அந்த பயம் இருக்கட்டும்,
எப்பா, டக்ளஸு, சீக்கிரம் வா ராசா.
//. நாங்கள் இருவரும் மிக மிக லேசாக தோளோடு தோள் உரசிக்கொண்டோம். அவ்வளவுதான், மிக லேசாக விளிம்பை பிடித்திருந்தாரோ //
தல அப்படி இல்ல தல உங்க மேல லைட்டா உரசுலாலே சும்மா ஷாக் அடிக்குமுல்ல:))) அதான் கை நழுவி இருக்கும்:))
:-))))
//(முந்தைய பதிவான பார்வதி நாச்சியார் : சிறுகதை).//
ஆதி வீனா என்னை படிக்க வைக்க ரொம்ப சிரமபடாதீங்க, நல்லதுக்கு இல்ல அவ்வளோதான் சொல்லுவேன்! அதான் ரீலு அந்து போச்சுல்ல அப்புறம் எதுக்கு போஸ்டர், ஊரில் எல்லாம் இன்று இப்படம் கடைசின்னு போஸ்டர் ஒட்டுவது போல்!
:)
ஏங்ங்க் ஊங்க் வாங்ங்க்
////. நாங்கள் இருவரும் மிக மிக லேசாக தோளோடு தோள் உரசிக்கொண்டோம். அவ்வளவுதான், //
வெள்ளை டிரஸில் கையில் பூங்கொத்தோடு தேவதைகள் எல்லாம் சுத்தி சுத்தி வந்து தந்தன தந்தன தந்தன என்று பாட்டு பாடினாங்களா இல்லையா?:))
11
12
13
14
15
16
17
18
19
எங்க ஆளையே காணோம்னு இனிமே எங்கிட்ட கேப்பியா?கேப்பியா?கேப்பியா?
வந்த வேலை முடுஞ்சுருச்சு பை..பை..
//நான் வர்றது தெரிஞ்சாவே நீங்க ஒதுங்கிப்போவ வேண்டியதுதான?"///
ஆமாம் பாஸ் கொஞ்சம் டெரரர்தான் போல :))
//குசும்பன் said...
////. நாங்கள் இருவரும் மிக மிக லேசாக தோளோடு தோள் உரசிக்கொண்டோம். அவ்வளவுதான், //
வெள்ளை டிரஸில் கையில் பூங்கொத்தோடு தேவதைகள் எல்லாம் சுத்தி சுத்தி வந்து தந்தன தந்தன தந்தன என்று பாட்டு பாடினாங்களா இல்லையா?:))//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))
///நான் வர்றது தெரிஞ்சாவே நீங்க ஒதுங்கிப்போவ வேண்டியதுதான?"//
ரைட்டு...
நீங்க ஒதுங்க வேண்டியதுதானே? எப்போ இருந்து நேருக்கு நேர் மோதுற தைரியம் வந்துச்சு சகா? இன்னும் நீங்க பரிசல் கிட்ட கத்துக்க வேண்டியது எவ்வளவொ இருக்கு
ச்சை ! சுபா வாட்டர் ஜக்கை தயிரு கொட்டின எடத்துலயே கொட்டி இருந்தா மோரு கிடைச்சி இருக்கும். வீணா போச்சு.
வீட்டுக்கு வீடு வாசப்படி.
நீங்க தயிர்ண்ணா நாங்க மோரு கொட்டி விளையாடுவோம்.... :))
நீங்க ஒதுங்க வேண்டியதுதானே? எப்போ இருந்து நேருக்கு நேர் மோதுற தைரியம் வந்துச்சு?
repeatuu
:)))
நாங்கல்லாம் கொதிக்கற ரசமே கொட்டிருக்கோம். :)) அதுவும் ஒரசாம ச்சும்மா பார்த்தாலே .....
கொட்டிய தயிர் பற்றி பதிவு கெட்டி.
:)))))))
கேயாஸ் தியரி மாதிரி இன்னும் கூட பெரிதாக இழுக்கலாம்!
ஆனால் அண்ணியின் ஒரே பதிலில் எல்லாம் முடிந்து விட்டது!
பூரிகட்டையை கையில் எடுக்கும் முன் வாயை குறைத்து கொள்ளுங்கள்!
//"நான் வர்றது தெரிஞ்சாவே நீங்க ஒதுங்கிப்போவ வேண்டியதுதான?"//
-அதான, ஒதுங்கிப் போயிட வேண்டியதுதான?? :))
/"நான் வர்றது தெரிஞ்சாவே நீங்க ஒதுங்கிப்போவ வேண்டியதுதான?//
அட்லீஸ்ட் கத எழுதும் போதாவது மோதிக்கலாமில்ல..:)
//எடுத்துவருவது சிரமமாகையால் ரமா என்னை எடுத்துத்தருமாறு பணித்தார். என் அவசரத்தில் 'என்ன விளையாடுறியா, ஓடிருங்க ரெண்டுபேரும்' என்று கடிந்து சொல்லிவிட்டு என் வேலையைப் பார்க்கத்துவங்கினேன்.//
எவ்வளவு ஆணவம்? ஆபாச (ஆண்கள் பாதுகாப்பு சங்கம்)தலைவரா இருந்துகிட்டு எதுத்து பேசறதா? வன்மையா கண்டிக்கிறேன்.
கேபிளார் போன்ற பெரிசுங்க முதல் (Sorry யூத்து) நேத்து வந்த நான் வரைக்கும் உங்கள ரமா மேட்டர்ல கலாய்க்கறதால உண்மையா நடந்தத சொல்லாம
“அடியேய், நான் கொட்டாமலேயே இப்படி பழி போடுறயே, நான் மட்டும் கொட்டியிருந்தேன்னா என்ன பண்ணியிருப்பே?" ” அப்படின்னு கேட்டதா சொல்றீங்க.
உண்மையில் நடந்தது சரணாகதி மற்றும் நண்பர் visit cut தானே, எங்கிட்ட மட்டும் சொல்லுங்க யாருக்கும் சொல்ல மாட்டேன்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
யோவ், நானும் ரொம்பக் காலமா பார்த்துக்கிட்டே இருக்கேன். ரொம்ப ஆணாதிக்கக்காரனாவே இருக்காரு. நம்மூருக்காரங்க பொஞ்சாதி கிழிச்சக் கோட்ட தாண்டமாட்டாங்கங்கிற எலக்கணத்துக்கு தக்கபடி நடந்து நல்ல பேரு வாங்க பாரய்யா... எழுத்தாளராம் எழுத்தாளர்... போய் தோசை மாவு வாங்கிட்டு வாய்யா...
நல்ல புனைவு... அடுத்த பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்....
அவுக கேட்டாவளாம்... இவுக மாட்டேன்னாவளாம்... :)))))))))))
நன்றி ரோஜா.! (என்ன ஆளையே காணோம் ஓய்?)
நன்றி தராசு.! (எல்லாரும் இதே கேள்வியைத்தான் கேட்கிறீங்க, மொத்தமா பதில் சொல்றேன். கீழ வாங்க)
நன்றி குசும்பன்.! (இந்த வரிகளை எழுதும்போது நிஜமாவே உங்களை நினைச்சுக்கிட்டேன் குசும்பன். ஹிஹி)
நன்றி அமித்துஅம்மா.! (ரசித்தேன். இந்த வார்த்தைகளை முன்பு ஏதேனும் பதிவில் பயன்படுத்தியிருக்கேனா? தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. நான் ஒரு அர்த்தத்தில் இதை ஒரு கதையில் பயன்படுத்திவைத்திருக்கிறேன். அதை இன்னும் பதிவேற்றவில்லை. நீங்கள் என்ன ஐடியாவில் இதை எழுதினீர்கள் என சொல்லமுடியுமா?)
நன்றி அப்துல்லா.! (ஒரு வார்த்த சொன்னதுக்கு இப்பிடியா? என்னாங்கடா இது அநியாயம்)
நன்றி ஆயில்யன்.!
நன்றி சூர்யன்.!
நன்றி கார்க்கி.!
நன்றி மணிகண்டன்! (அதுசரி)
நன்றி ராஜா.! (யோவ்.. நாங்க என்னா விளையாடிக்கிட்டா இருக்கிறோம்?)
நன்றி மயில்.! (சும்மா பார்த்தாலே/ ரசித்தேன்)
நன்றி நர்சிம்.!
நன்றி விக்னேஷ்வரி.!
நன்றி வால்.! (முடிஞ்சா விட்டுறணும் தல..)
நன்றி கார்ல்ஸ்.!
நன்றி கேபிள்.!
நன்றி அறிவிலி.! (என்னையா ஒளர்றிங்க.. தலைவர்னா எதுத்துதானே பேசணும்.? நீங்க அடங்கிப்போக சொல்றீங்க)
நன்றி ஸ்ரீராம்.! (அதெல்லாம் ப்பப்பிளிக்கா கேக்கப்பிடாது)
நன்றி செல்வா.! (அதையெல்லாம் செஞ்சுக்கிட்டுதான் இருக்கோம். சொல்லவந்துட்டாரு பெருசா?)
நன்றி மகேஷ்.! ஹாஹா.. இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
பெஸ்ட் பின்னூட்டங்களை தொகுத்தால் டாப் 10 னும் உங்களுக்குதான் மகேஷ். ரசனை.
நம் வீரத்தை எல்லாரும் சந்தேகப்பட்டிருக்கீங்க, தெரியும்ல.. போய் முந்தைய எச்சரிக்கைப்பதிவுகளை படிச்சுப்பாருங்க.. நாங்கெல்லாம் அப்பளத்தையே உடைச்சு சாப்பிடுறவங்களாக்கும்.
சூடா எதிர்பதிவு போட்டாச்சு !!!
http://thuklak.blogspot.com/2009/09/blog-post.html
//...அடுத்தடுத்த வசனங்களிலேயே இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
ரொமேண்டிக்கா இருக்கு. நல்லா இருக்கு ஆதி.
ஏம்ப்பா,
20 வருஷம் கழிச்சுக்கூட நானெல்லாம் இன்னும் கையது கட்டி, வாயது பொத்தி, மெய்யது குறுகின்னு வாழ்ந்துட்டிருக்கேன்.
நேருக்கு நேரா? உனக்குத் தைரியம் ஜாஸ்திதான்.
வம்பா அடிபடப் போற அது சர்வ நிச்சயம்.
பெரியவங்க எல்லாம் ஏதோ பேசிக்கிட்டு இருக்கீங்க. நான் நெக்ஸ்டு மீட் பண்றேன்.
//ப்ளாக்ரோலில் என்னையும் சேர்த்தத்தற்கு சிறப்பு நன்றிண்ணே.//
கும்மியடிக்க சூப்பர் பதிவு அங்கிள். இருந்தாலும் ஒரே கமெண்ட். :)
//நடுவே சுபாவை வைத்துவிட்டு//
அடிங்க..அவங்க என்ன பொம்மையா?
//ரமா என்னை எடுத்துத்தருமாறு பணித்தார்//
ரமாக்காவை ஹிட்லர் ரேஞ்ச்ல சொல்லைலனா தூங்க மாட்டியளோ?
//என்ன விளையாடுறியா, ஓடிருங்க ரெண்டுபேரும்' என்று கடிந்து சொல்லிவிட்டு //
கடிந்தாராமாம்.. சோக்குடோய்..
//என் வேலையைப் பார்க்கத்துவங்கினேன். //
இது அதை விட சோக்கு சாமி சோக்கு..
//சண்டை போட அவருக்கும் நேரமில்லாததால்//
இப்போதான தெரியுது என்ன தைரியத்துல கடிந்துக்கிற மாதிரி சீன் போட்டிங்கன்னு.
//"நான் வர்றது தெரிஞ்சாவே நீங்க ஒதுங்கிப்போவ வேண்டியதுதான?".//
அதானே..
// "நான் வர்றது தெரிஞ்சாவே நீங்க ஒதுங்கிப்போவ வேண்டியதுதான?"
.//
கொஞ்ச நாள் அண்ணி இல்லாம தனியா இருந்து உங்களுக்கு குருட்டு தைரியம் வந்துருச்சோ?
அதானே அவங்க வர்றாங்கன்னு தெரிஞ்சுகிட்டு எப்பவும் போற மாதிரி நீங்களா ஒதுங்கிப் போக வேண்டியது தானே?
சஞ்சய் அங்கிள்
சுபா மகளென்று உங்களுக்கு யார் சொன்னது!?
வால்,
அய்யகோ, அப்படித் தானே சொன்னதாக நினைவு. மன்னிக்கவும் ஆதி அங்கிள். :(
ஹா ஹா....நீங்க எழுதறதுலயே சோடை போகாத விஷயம் இது தாங்க...
ரசித்து சிரித்தேன்.
( குசும்பனின் 2 ஆவது பின்னூட்டம்...தாறுமாறு )
பதிவின் க்ளைமேக்ஸீம், பின்னூட்டங்களும் நல்லா இருந்தது...
குசும்பன்,மஹேஷ் மற்றும் பலர்...
ரோஜாகாதலனின் பின்னூட்டம் தனி ரகம்.
நன்றி ட்ரூத்.! (இருந்த ஒரு வரியையும் பிடிச்சுட்டீங்க)
நன்றி சஞ்சய்.! (தல.. நல்ல மூட்ல இருக்குறமாதிரி இருக்குது)
நன்றி வேலன்.! (வெளிய வேற சொல்லிட்டு திரியுறீரா? வெட்கங்கெட்ட மனுஷரய்யா நீர்)
நன்றி வெங்கிராஜா.! (யூத்தாமாம்)
நன்றி ஜோஸப்.! (நம்ப வீட்லயும் இப்பிடித்தானா பாஸ், நேர்ல பார்க்கச்சொல்லோ பெரிய வீரன்மாதிரி இருந்தீரு?)
நன்றி செய்யது.!
நன்றி தமிழ்பறவை.!
சஞ்சய் :
சுபா பெயர் விளக்கம் : எனக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் மட்டும்தான் உண்டு. தங்கமணி பதிவுகளில் பெரும்பாலானவை கற்பனை(?) என்பதை அறிவீர்கள். ரமா என்ற கற்பனைப் பெயரைப்போலவே சுபாவும் கற்பனைப்பெயரே. முதலில் ஒரு பெண்குழந்தையைப் போலவே நிகழ்வுகளை எழுதலாம் என எண்ணியிருந்தேன். பிறகு பெயரை மட்டுமே வைத்துக்கொண்டேன், ஒரு வித்தியாசத்துக்காக.
அதாவது தங்கமணி கதைகளில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல.. அவ்வ்வ்வ்வ்..
//.. "நான் வர்றது தெரிஞ்சாவே நீங்க ஒதுங்கிப்போவ வேண்டியதுதான? ..//
ரசித்தேன்..
மொதல்லியே இதைப்படிச்சிட்டேன். குசும்பன் கமெண்ட்டு என்னன்னு பாத்துட்டு போட்டுக்கலாம்னு இவ்வளவு நேரம் இருந்தேன். :)
//நன்றி அறிவிலி.! (என்னையா ஒளர்றிங்க.. தலைவர்னா எதுத்துதானே பேசணும்.? நீங்க அடங்கிப்போக சொல்றீங்க)//
தலைவர்னா எப்படியெல்லாம் நடந்துக்கணும்னு முன்மாதிரியா இருக்கணும். இப்படி எதுத்து பேசி அடி வாங்க வழி காட்டக் கூடாது.:)))
//ஆதிமூலகிருஷ்ணன் said...
September 4, 2009 1:40 AM அதாவது தங்கமணி கதைகளில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல.. அவ்வ்வ்வ்வ்.. ..//
அண்ணே நம்பிட்டேன்...................அவ்வ்வ்வ்வ்
இன்னைக்கு ஊருக்கு போறேன்.....................
:))
//எடுத்துவருவது சிரமமாகையால் ரமா என்னை எடுத்துத்தருமாறு பணித்தார். //
பணித்தாரா?
எப்படி சொல்லிருப்பாங்கன்னு எங்களுக்குத்தான தெரியும்...
நன்றி அமித்துஅம்மா.! (ரசித்தேன். இந்த வார்த்தைகளை முன்பு ஏதேனும் பதிவில் பயன்படுத்தியிருக்கேனா? தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. நான் ஒரு அர்த்தத்தில் இதை ஒரு கதையில் பயன்படுத்திவைத்திருக்கிறேன். அதை இன்னும் பதிவேற்றவில்லை. நீங்கள் என்ன ஐடியாவில் இதை எழுதினீர்கள் என சொல்லமுடியுமா?) /
haiyoo
என் அமித்து அப்டேட்ஸ் பதிவில் நீங்கள் கமெண்ட் போட்டபோது சுபாவிடம் நீங்கள் ஏம்ல உயிரை வாங்கற?
என்று கேட்டதற்கு, அவர் அதே ரிதமில் சொன்ன பதிலாக ஏங்ங்க் ஊங்ங்க் வாங்ங்க்
மனசுக்குள் அடிக்கடி சொல்லிப்பார்த்து ரசித்துக்கொண்டேன்.
மிகச்சரியாக இந்தப் பதிவில் நீங்கள் இடித்துக்கொண்டதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக சுபா இருந்தாரா
அதான் பயன்படுத்தினேன்.
(ஷ்ஷ் போங்க என் பதிவு நீளத்துக்கு கமெண்ட் அடிக்க வேண்டியதா போச்சு :)))))))))))
நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி அம்மிணி.!
நன்றி அறிவிலி.!
நன்றி அத்திரி.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி பரிசல்.! (பணிந்தார் அல்ல, பணித்தார் ஐயா.. தமிழில் அதற்கு அர்த்தம் ஆர்டர் போட்டார் என்பதாகும். ஹிஹி)
நன்றி அமித்துஅம்மா.! (ஹிஹி.. அதான் என்னடான்னு கொளம்பிட்டேன். நம்ம ஞாபகசக்தி எவ்வளவு சிறப்பானதுனு தெரிஞ்சிருக்குமே)
நன்றி ஜோஸப்.!
ஹிஹி.. தெரியாத்தனமா ஜோஸபுக்கு ஒரு எக்ஸ்ட்ரா நன்றி சொல்லிட்டேன்.!
/
தராசு said...
//"அடியேய், நான் கொட்டாமலேயே இப்படி பழி போடுறயே, நான் மட்டும் கொட்டியிருந்தேன்னா என்ன பண்ணியிருப்பே?"//
உண்மையாலுமே இப்படி தைரியமா கேட்டியா தலைவா??
எங்க சத்தியமா சொல்லு, நெஞ்சத் தொட்டு சொல்லு.
/
சொல்லுங்க தல சொல்லுங்க கேக்குறோம்ல
:)))))))))
யாரும் இதுக்கு விதி விலக்கில்லை எனும் போது நீங்கள் மட்டும் எப்படி?
Post a Comment