கொஞ்சம் (கொஞ்சமாகத்தான்) சிக்கலான இந்தத் தொடருக்கு என்னை அழைத்த மாதவராஜுக்கு என் நன்றி. சிக்கல் என்று ஏன் சொல்கிறேன் எனில் பிடித்தவர்கள் நிறைய்ய என்றால் பிடிக்காதவர்கள் நிறைய்ய நிறைய்ய.! ஆகவே எதற்காக யாரைத் தேர்வுசெய்வது என்பதில்தான் சிக்கலே. மற்றபடி தைரியத்துக்கெல்லாம் ஒன்றும் அவசியமில்லை/ குறைச்சலில்லை என்றுதான் நினைக்கிறேன். நமக்கு பத்து போடுவது பிடிக்கும் என்பதால் ஏழைப் பத்தாக்குகிறேன்.
1.அரசியல் தலைவர்
பிடித்தவர் : கருணாநிதி, பிடிக்காதவர் : ராமதாஸ்
பிடித்தவர் : கருணாநிதி, பிடிக்காதவர் : ராமதாஸ்
2.எழுத்தாளர்
பிடித்தவர் : கி.ராஜநாராயணன், பிடிக்காதவர் : எஸ்.ராமகிருஷ்ணன்
3.கவிஞர்
பிடித்தவர் : நா.முத்துக்குமார், பிடிக்காதவர் : பா.விஜய்
4.இயக்குனர்
பிடித்தவர் : பாலா, பிடிக்காதவர் : தரணி
5.நடிகர்
பிடித்தவர் : கார்த்தி, பிடிக்காதவர் : விஷால்
6.நடிகை
பிடித்தவர் : பாவனா, பிடிக்காதவர் : ஸ்ரேயா
7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : யுவன்ஷங்கர்ராஜா, பிடிக்காதவர் : விஜய்ஆன்டனி
பிடித்தவர் : யுவன்ஷங்கர்ராஜா, பிடிக்காதவர் : விஜய்ஆன்டனி
8. ஓவியர்
பிடித்தவர் : மணியம்செல்வன், பிடிக்காதவர் : ஸ்யாம்
9. பதிவர்
பிடித்தவர் : அமிர்தவர்ஷினி அம்மா, பிடிக்காதவர் : கார்க்கி
10. பதிவர் (கவிஞர்)
பிடித்தவர் : சரவணகுமார் MSK, பிடிக்காதவர் : அனுஜன்யா
விதிமுறைகள் :
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்
2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்
குறிப்புகள் :
1. பிடித்தவர், பிடிக்காதவர் என்ற தலைப்புடன் தற்போது என்பதை அடைப்புக்குறிக்குள் சேர்த்துக்கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்
2. கேள்விகள் பத்தைத் தாண்ட வேண்டாம்
இத்தொடரைத் தொடர நான் அழைப்பது..
1. துளசிகோபால்
2. அ.மு.செய்யது
3. பரிசல்காரன்
4. ஈரோடு கதிர்
.
58 comments:
மீ த பர்ஸ்டேய்ய்ய் :)))
நிறைய !!! நிறைய ???
டீடெயில் எதிர்வரும் காலங்களில் எழுத்துக்களில் வெளிப்படலாம்
காத்திருக்கிறோம் :)))
//10. பதிவர் (கவிஞர்)
பிடித்தவர் : சரவணகுமார் MSK, பிடிக்காதவர் : அனுஜன்யா//
:)
ஆரம்பிச்சாச்சா அடுத்தது? நீங்க பத்து போடுங்க.. .நாங்க தலவலிக்கு பத்து போட்டுக்கறோம் :))))
ஆதிகிட்ட தொடர் பதிவு போகும்போது பத்தாயிடும்னு நினைச்சேன்... நினைச்ச மாதிரியே...
பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க ஆதி...
பிரபாகர்.
நல்லா இரும் ஓய்..
/பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்//
அனுஜன்யாவும்,ஸ்ரேயாவும் மும்பைகாரங்கப்பா..
//9. பதிவர்
பிடித்தவர் : அமிர்தவர்ஷினி அம்மா, பிடிக்காதவர் : கார்க்கி//
:)
நலமா?
அனுஜன்யா உங்களுக்கு நன்றி சொல்வாரு.. எதுக்கா? புடிக்கலைன்னு சொன்னாலும் கவிஞர்னு அவரை ஒப்புகிட்ட ஒரே நல்ல மனுசன் நீதான்யா..
(பாராதிராஜா குரலில் படிக்கவும்)..யூ ஆர் தி பெஸ்டஸ்ட் பதிவர்யா...
உம்ம ரசனை நம்ம எல்லோருக்கும் தெரிந்ததுதான். எஸ்ரா அளவுக்கு என்னை உயர்த்தியதற்கு நன்றி. ஏற்கெனவே நண்பர் குழாம் என்ற அவப்பெயர்.
ஆமாம், உனக்கு ஏன்யா MSK மேல இவ்வளவு கோவம்?
அனுஜன்யா
இதை தோழர் மாதவராஜ் சீரியஸான பதிவாகத் தொடரச் சொன்னதாக நினைத்தேன்.
அழைப்பினை ஏற்றதற்கு நன்றி....
//இதை தோழர் மாதவராஜ் சீரியஸான பதிவாகத் தொடரச் சொன்னதாக நினைத்தேன். //
இப்ப்டியும் இருக்கட்டுமே நர்சிம்...!!!
ஹா...ஹா...
ரசனைகளில் வெளிப்படும் ரசனை..
//9. பதிவர்
பிடித்தவர் : அமிர்தவர்ஷினி அம்மா, பிடிக்காதவர் : கார்க்கி//
:)))))))))))
//10. பதிவர் (கவிஞர்)
பிடித்தவர் : சரவணகுமார் MSK, பிடிக்காதவர் : அனுஜன்யா//
:(((((((((((
:)
என்னுடைய கேள்வி திரு. நர்சிம் மூலமாக வெளிப்பட்டு,திரு. மாதவராஜ் மூலமாக அடைப்பட்டது.
அதனால்,
:) நகைப்பான் மட்டும்.
எனக்கும் பா.விஜய் அ பிடிக்காது.மட்டமான கவிஞர்.
பிடிக்காத கவிஞர்..பிடிக்காத பதிவர் கிரேட் எஸ்கேப்பா ?????
( என்னையும் அழைத்ததற்கு நன்றி !! விரைவில் எழுதுகிறேன் !!!! )
பிடித்தவர் : கி.ராஜநாராயணன், பிடிக்காதவர் : எஸ்.ராமகிருஷ்ணன்
!!! ???
பா.விஜய் விஷயத்தில் நீங்கள், அ.மு.செ, நான் மூவரும் ஒன்னாதான் இருக்கோம் போல
:)))
ஹை உங்களுக்கும் ஸ்ரேயா பிடிக்காதா
அழைப்பிற்கு நன்றி ஆதி...
//பத்தைத் தாண்ட வேண்டாம்//
தாண்டாது....தாண்ண்ண்ண்ட்ட்ட்டாது!!!!!
(கேள்வி கேக்கத்தெரிஞ்சாத் தானே தாண்டறதுக்கும், பதில் சொல்றதுக்கும்)
நன்றி ஆயில்.!
(மீத பர்ஸ்ட் போட்டா பதிவர்களுக்கு வேண்டிய ஒரு மூத்த எழுத்தாளர் தேடிவந்து ஒதைப்பார், ஜாக்கிரதை)
நன்றி கோவிஜி.!
நன்றி மகேஷ்.! (இது அடிக்கடி போடுறதுதானே)
நன்றி பிரபாகர்.! (நம்பளப்பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு ஒங்களுக்கு)
நன்றி கார்க்கி.!(ஹிஹி)
நன்றி தண்டோரா.! (ஹிஹி)
நன்றி ராஜன்.!
நன்றி பாபு.! (நீங்க? இப்பல்லாம் எழுதறதில்லையா?)
நன்றி வெண்பூ.! (அடப்பாவி, அனு அங்கிள்.. இவரைக்கொஞ்சம் கவனிங்க)
நன்றி அனுஜன்யா.! (நெனப்புதான்.!)
நன்றி நர்சிம்.! (பதில் தனிப்பின்னூட்டமாய்..)
நன்றி மாதவராஜ்.! (ஒழுங்கா பண்ணினேனா?)
நன்றி கும்க்கி.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி தென்றல்.!
நன்றி முரு.!
நன்றி செய்யது.!
நன்றி அமித்துஅம்மா.!
நன்றி தாரணி.!
நர்சிம் மற்றும் முரு :
இந்தப்பதிவில் எந்த நகைச்சுவையும் இல்லை. எனக்கு கமர்ஷியல் பிடிக்கும்தான், ஆனால் விஜய், அஜித், விஷால் பண்ற கமர்ஷியல் சுத்தமாக பிடிக்காது. கார்க்கி பதிவுலகின் விஜய். அவர் என் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் பதிவுகள் பிடிக்காது என சொல்லக்கூடாதா என்ன? இந்த லிஸ்ட்டும் கொஞ்சம் பெரிதுதான். பழகாதவர்களின் பெயர்களை நான் குறிப்பிட்டு வீணான மனக்கசப்பை ஏற்படுத்த நான் விரும்பவில்லை.
அதே நிலைதான் அனுஜன்யாவின் விஷயத்திலும்.. புரியாத கவிதைகள் எனக்குப் பிடிப்பதில்லை.
இந்தக்கருத்து அவர்களின் எல்லாப்பதிவுகளுக்கும் பொருத்தமானது அல்ல, பெரும்பாலான என்ற அர்த்தத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன். மாற்றுக்கருத்துகளைத் தாங்கும் திறன் அவர்களுக்கு இருக்கிறதென்பது நான் அறிந்தது.
அதே போல எஸ்ரா பற்றிய கூற்றும் ஸ்டண்டுக்காக எழுதப்பட்டதல்ல. அவரது எழுத்துகளில் அவரது மேதைமையை முன்னிறுத்தும் தன்முனைப்பு இருப்பதாக நான் கருதுகிறேன்.
ச.தமிழ்செல்வன் போன்ற எழுத்தாளர்களின் நேரடியான வாழ்வியல் கதைகளுக்கு முன்னால் எந்த சாருநிவேதிதா, ஜெயமோகன்களின் புரிபடாத எந்த பின்நவீனக்கதைகளும் எனக்கு ஒரு பொருட்டல்ல..
//ச.தமிழ்செல்வன் போன்ற எழுத்தாளர்களின் நேரடியான வாழ்வியல் கதைகளுக்கு முன்னால் எந்த சாருநிவேதிதா, ஜெயமோகன்களின் புரிபடாத எந்த பின்நவீனக்கதைகளும் எனக்கு ஒரு பொருட்டல்ல.. //
இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது....
ம்ம் ...ம்ம் ...
அன்பின் ஆ.மூ.கி.,
என்னுடைய கேள்வியானது 9, 10 உறவுகளைப் பற்றியது மட்டுமே.
பெரும் பிரபலங்களைப் பற்றி நாம் ஆயிரமாயிரம் விவாதித்தாலும், அது அவர்களை போய் சேருமா என்பதும், அப்படி சேர்ந்தாலும் அவர்கள் அதற்கு செவி மடுப்பார்களா என்பதும் சந்தேகமே.
ஆனால், பதிவுலகில் இருக்கும் நண்பர்களை இந்த உறவுக்குள் கொண்டுவரும்போது, யாராவது விவாதத்தை ஆரம்பித்து வைத்தால் சகநண்பர்களின் நிலை என்னாவது?
கார்க்கி, அனுஜான்யாவுக்கும் உங்களுக்குமான நல்லுறவு எல்லோருக்கும் தெரிந்தலால் அனைவரும் நகைப்போடு விட்டுவிட்டோம், தெரிந்திருக்காவிட்டால் இதுவே ஒரு அவர்களைப் பற்றிய மோசமான கருத்துகளை உருவாக்கும் ஆரம்ப புள்ளியாகி விடுமல்லவா?
ஆதி அண்ணா.. நான் இங்க என்ன பின்னூட்டம் போடணும்..??!!!!
என்னை பிடித்திருப்பதற்கு நன்றி நன்றி..
உங்களோட தனிப்பின்னூட்டம் பற்றி : நிறைய வாசிக்கறீங்க போல.. :)
கதிர், தியாவுக்கு நன்றி.!
முரு,
சரியாக மடக்கிவிட்டீர்கள். இந்த கோணத்தில் நான் யோசிக்கவில்லையே..
அவ்வ்வ்வ்வ்வ்....
என்னை சரியாக புரிந்துகொண்டதற்கு நன்றிகள் ஆ. மூ. கி.
:)
//Blogger ஆதிமூலகிருஷ்ணன் said...
நன்றி ஆயில்.!
(மீத பர்ஸ்ட் போட்டா பதிவர்களுக்கு வேண்டிய ஒரு மூத்த எழுத்தாளர் தேடிவந்து ஒதைப்பார், ஜாக்கிரதை)//
அவரை மீட் பண்றதுக்குத்தான் :))))
அப்படி போடு...
:))))))
:((((((
சரவணா, அறிவிலி.. நன்றி.!
நர்சிம், முரு, அனுஜன்யா, கார்க்கி :
புரொஃபைலில் உள்ள போட்டோவை நன்கு உற்றுப்பார்த்துக் கொள்ளவும். மீசையில் மண் ஒட்டவில்லை..
// கார்க்கி பதிவுலகின் விஜய். //
:))))
//ஆதிமூலகிருஷ்ணன் said...
November 2, 2009 4:39 PM சரவணா, அறிவிலி.. நன்றி.!
நர்சிம், முரு, அனுஜன்யா, கார்க்கி :
புரொஃபைலில் உள்ள போட்டோவை நன்கு உற்றுப்பார்த்துக் கொள்ளவும். மீசையில் மண் ஒட்டவில்லை//
நகைத்-தேன்
top tucker boss
என்னத்தச் சொல்ல
//பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்
என்பது இந்தத் தொடரின் விதி! (விதி :1)//
தமிழராக இருக்கவேண்டும் என்று சொல்லிருக்கலாம் -:(
//பிடிக்காதவர் : கார்க்கி//
அண்ணே இதுல ஏதும் உள்குத்து இல்லையே
அனுஜன்யா அண்ணாச்சியின் கவிதை புரியவில்லை என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன்..........
( உண்மைய சொன்னதுக்கு ரொம்ப நன்றி).........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html
diplomatic ஆ பதில் சொல்லாம இருந்திருக்கீங்க.. நல்லாருக்கு.. :)
//ச.தமிழ்செல்வன் போன்ற எழுத்தாளர்களின் நேரடியான வாழ்வியல் கதைகளுக்கு முன்னால் எந்த சாருநிவேதிதா, ஜெயமோகன்களின் புரிபடாத எந்த பின்நவீனக்கதைகளும் எனக்கு ஒரு பொருட்டல்ல.. //
சூப்பருண்ணே !!!! இதே இதே !!!!
கி.ராவையும் தமிழ்ச்செல்வனையும் எப்போதும் தலையணை பக்கத்திலேயே வைத்திருப்பவனுக்கு
சக்கரக் கட்டியாக தித்தித்தது உங்களின் இந்த வரிகள் !!!
பெரியவங்க என்னவோ சொல்லி இருக்கீங்க!
நான் எல்லாத்தையும் அப்படியே ஏத்துக்கறேனுங்க :)
பெரியவங்க என்னவோ சொல்லி இருக்கீங்க!
நான் எல்லாத்தையும் அப்படியே ஏத்துக்கறேனுங்க :)
//10. பதிவர் (கவிஞர்)
பிடித்தவர் : சரவணகுமார் MSK, பிடிக்காதவர் : அனுஜன்யா//
சரிங்க :-)
போட்டாச்சு ஆதி. இங்க போய்ப் படிங்க
இதுக்கு ஏன் எந்த லேபிளுமே இல்ல....
ராமகிருஷ்ணனை பிடிக்காதா...ஓக்கே...ஆனால் ஏன் பிடிக்காது ஏன் பிடிக்கும் என்றும் சொல்லி இருக்கலாம் ...
உங்களின் பட்டியலில் நிறைய விஷயங்கள் அப்படியே எனக்கும் பிடிக்கும்/காது.
ச.தமிழ்செல்வன் போன்ற எழுத்தாளர்களின் நேரடியான வாழ்வியல் கதைகளுக்கு முன்னால் எந்த சாருநிவேதிதா, ஜெயமோகன்களின் புரிபடாத எந்த பின்நவீனக்கதைகளும் எனக்கு ஒரு பொருட்டல்ல.. //
நச்சுன்னு சொல்லியிருக்கீங்க பாஸ்
மனசு நிறைஞ்ச பதிலா இருக்கு
மகேஷ், மேவீ, தராசு, பித்தன், அத்திரி, பிரியமானவள், செய்யது, ரம்யா, பரிசல், அமுதா (பின்னூட்டத்துல சொல்லியிருக்கேன் பாருங்க..), இலக்கியன், அமித்துஅம்மா..
அனைவருக்கும் நன்றி.!
அச்சச்சோ....
வம்புலே மாட்டிவிடும் எண்ணமா? :-)))))
எஸ்ரா பற்றிய உங்கள் கருத்து எனக்கு அதிர்ச்சியே!. anyway அது உங்கள் கருத்து. உண்மையாககூட இருக்கலாம். To some extent, அது தவறில்லை என்பது என் கருத்து. i guess you could have read this, if not; kindly read this(~15mins reading!) below link.
http://www.sramakrishnan.com/naerkaanel_A.asp
பிடித்தது மட்டுமே எழுதலாமே. பிடிக்காததை எழுதுவதர்காக ..பிடித்ததை எழுதுவதாக தோன்றுகிறது.. i blame Mr. Madhavaraj for this. (btw i admire him).
// பிடிக்காதவர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பிடிக்காதவரில் இவர் இடம் பெறுவார் என நான் எதிர்பார்க்கவில்லை.
//விஷால், பாவனா
ஒரே டேஸ்ட்டுங்க. பாவனா ரசிகர் மன்ற துணைத்தலைவர் நீங்கள் (தலைவர் யாரா ?. நல்ல கேள்வி கேட்டீங்க) என்ற முறையில் வாழ்த்துக்கள் :)
//ச.தமிழ்செல்வன் போன்ற எழுத்தாளர்களின் நேரடியான வாழ்வியல் கதைகளுக்கு முன்னால் எந்த சாருநிவேதிதா, ஜெயமோகன்களின் புரிபடாத எந்த பின்நவீனக்கதைகளும் எனக்கு ஒரு பொருட்டல்ல.. //
:)
Post a Comment