காரணம்


ist2_7730636-woman-wearing-white-dress-with-wings

அப்போது அவர்கள் வெண்மை நிற உடைகளை அணிந்திருக்கவில்லை

பின்புறத் தோள்களில் இறக்கைகளும் கூட இருக்கவில்லை

ரத்தம் சொட்டும் பற்களுடன்

இரையின் சுவையை சிலாகித்தபடி

அவர்கள் பேசிக்கொண்டிருந்த ஒரு தருணத்தில்தான்

நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு

வேறு வேறு திசையில் பயணித்துக்கொண்டிருந்தோம்.!

.

36 comments:

நல்லா இருக்கு.

தேவதைகளின் (Cupid"s Arrow) மன்மதஅம்புகள் பாயும்போது “அந்தி மழைப் பொழிகிறது” ஒரு குடையில்.

தோள்களில் இறக்கை இல்லாத போது
பேமிலி கோர்ட் வாசலில் வேறு வேறு குடையில்.

 

பதிவை ரசித்தேன்..

அதைவிட ரவிஷங்கர்ஜி அசத்தல்

 

புரியறாப்லதான் இருக்கு..

 

ஆமூகி!

இது ஒரு அரசியல் கவிதை. சரியா? :-)

 

உங்க போட்டோ டெரரா இருக்கு தல.

 

நன்றி ரவிஷங்கர்.!
நன்றி நர்சிம்.! (அப்ப, கவிதை ஊத்திக்கிச்சா?)
நன்ற்றி தண்டோரா.!
நன்றி யுவகிருஷ்ணா.! (குட்டிப்பதிவுங்கிறதால வந்தீங்களா பாஸ்?)
நன்றி அமித்து.!
நன்றி தராசு.! (நீங்கள் கவனிச்சுட்டீங்களா?)

 

தேவதைகள் அடிக்கடி வெண்நிற உடை அணியாம விட்டுடுறாங்க :-(

 

அய்யய்யோ.. அப்பப்பா.. ஒடம்புல இருக்கற எல்லா ஓட்டையிலயும் ரத்தம் ஒழுகுதுடா சாமி

 

எனக்கு புரிஞ்சுடுச்சு... புரிஞ்சுடுச்சு...

எனக்கு மட்டும் தனி மடலில், விளக்கம் அனுப்பிடுங்க

 

ரவி ஷங்கர் எழுதியிருக்கிறது புரியுது.

நீங்க எழுதியிருக்கிறது புரிஞ்சுதா இல்லையான்னே புரியல.

புரியாததுதான் நல்ல கவிதைன்னு எல்லாரும் சொல்றாங்க.

ஆனா, எனக்கு எது கவிதைன்னே தெரியாது.

 

ஆதி,
அருமையான கவிதை (படம் இல்லையென்றால்)

 

ஆதி,
அருமையான கவிதை (படம் இல்லையென்றால்)

 

Divorce ?

இன்னிக்கு ஏன் இவ்ளோ சீரியஸா ????

குட் ஒன் !!

 

ஆதிமூலம்..!

இப்போதுதான் இறக்கை இல்லாமலேயே அவரவர் போக்கில் பறக்கிறார்களே..!

 

வெகு அருமை அண்ணா.. :))

 

வன்முறையின் எழுச்சி ..

கவிதை சூப்பர் ...

இந்த சைடு வந்து பாருங்க ..

http://ennaduidu.blogspot.com/2009/11/blog-post.html

 

என் மூளைக்கு என்னன்னே புரியல. விளக்க முற்படுகிறீர்களா?

 

உங்கள் கவிதை கோபம்

ரவிஷங்கர் சொன்னது, காமம் :) ஏதேதோ தோணுதுப்பா :) :)

 

நல்லா இருக்கு....
இப்படிக்கூட எழுத ஆரம்பிச்சாச்சா...?!

 

அன்பின் ஆதி

எனக்குப் புரியவில்லை

ரவ்ஷங்கர் கருத்தினைப் படித்தவுடன் சட்ட்டெனப் புரிந்தது. ஆமாம் அதுதான் உங்கள் எண்ணமுமா ???

நல்வாழ்த்துகள் ஆதி

 

பதிவு அருமை அண்ணாச்சி !!
போட்டோ அதைவிட அருமை ..

 

கேவிஆர், பட்டாசு, இராகவன், அறிவிலி, அகநாழிகை (கருத்தை ஏற்கிறேன்), செய்யது, உண்மைத்தமிழன், ஸ்ரீமதி, ரோமியோ, அருணா, பப்பு, கணேஷ், தமிழ்பறவை, சீனா, ஜெனோவா..

அனைவருக்கும் நன்றி.!

 

சரியோ, தவறோ.. சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விளக்க முயல்கிறேன்..

'காதல் முறிந்து போவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்னொரு புதிய காரணம். அதற்குரிய அன்பைச்செய்யும் தேவதைகள் அதன் வேலையை கவனிக்காமல், வழக்கங்களை மாற்றிக்கொண்டால் என்னவாகும்.?'

காதல் மட்டுமின்றி பிற உறவு, நட்புக்கும் இதைப் பொருத்திப்பார்க்கலாம்.

 

இப்போதான் கவனிச்சேன் ஃபோட்டோவில ஹீரோ மாதிரி இருக்கீங்க...
சுந்தர்.சி. ஹீரோதானே...?!

 

கவிதை அருமை. உங்கள் விளக்கம் மேலும் ரசிக்க வைக்கிறது.

 

அப்பா..அசத்துறீங்க ஆதி!

 

இலங்கை தமிழரின் துயரில் நமது பங்களிப்பை நீங்கள் விளக்கியுள்ளதாக புரிந்து கொண்டேன்...என் புரிதல் சரியென்றால் நம் இருவருக்கும் சேர்த்து ஒரு சபாஷ்!

 

/
ஆதிமூலகிருஷ்ணன் said...

சரியோ, தவறோ.. சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விளக்க முயல்கிறேன்..

'காதல் முறிந்து போவதற்கு பல காரணங்கள் உள்ளன. இன்னொரு புதிய காரணம். அதற்குரிய அன்பைச்செய்யும் தேவதைகள் அதன் வேலையை கவனிக்காமல், வழக்கங்களை மாற்றிக்கொண்டால் என்னவாகும்.?'

காதல் மட்டுமின்றி பிற உறவு, நட்புக்கும் இதைப் பொருத்திப்பார்க்கலாம்.
/

அப்பாடா லேட்டா வந்ததனால எம்புட்டு ஈஸியா புரியுது இல்லைனா எல்லாரையும் மாதிரி தலைய பிச்சிக்கணும் :))))))

 

நல்ல கவிதை.

 

காதலும், சண்டையும் சண்டையும் சகஜம் வாழ்க்கையில. :)

 

டெரரர்ரா இருக்கு

:-))))))))))

 

//காதல்
முறிந்து
போவதற்கு
பல காரணங்கள்
உள்ளன
இன்னொரு
புதிய காரணம்
அதற்குரிய அன்பைச்
செய்யும் தேவதைகள்
அதன் வேலையை
கவனிக்காமல், வழக்கங்களை மாற்றிக்கொண்டால்
என்னவாகும்.?//

அருமையான கவுஜ !

 

கவிதை நல்லா இருக்கு. :)

 

நல்லாயிருக்கு.. தூங்கிக்கிட்டிருக்க மிருகம்.