யோகி -விமர்சனம்

மிகச்சில படங்களையே வெளியான உடனே பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலில் லிஸ்டில் வைத்திருப்பேன். இந்தப்படமும் அதில் இருந்தது. அவ்வளவுக்கு நாங்க ஒர்த் இல்லைன்னு அமீர் அண்ட் கூட்டணி சொல்லிவிட்டது என்றுதான் படத்தை பார்த்தபின் சொல்லவேண்டியதிருக்கிறது. ஒரு வேளை ஓவர் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். இருப்பினும் கொஞ்சமாகவாவது உருப்படியாக ஒரு காரியத்தை ஒருவர் ஏற்கனவே பண்ணித்தொலைத்திருக்கும் போது எதிர்பார்ப்பு வரத்தானே செய்கிறது.

ரௌடி ஹீரோ.. (என்னது ஒரே வார்த்தையில் கொட்டாவி விடுகிறீர்கள், பொறுங்கள் ஐயா..)

அவர் ஒரு அனாதை, அவருக்கு ஒரு பெக்கூலியர் ஃபிளாஷ்பேக், கூட நாலு அசிஸ்டெண்ட் ரௌடிகள்.. இப்படியாக இருந்துகொண்டிருக்கையில் திருடப்போன இடத்தில் தெரியாத்தனமாக காரோடு ஒரு குழந்தையும் வந்துவிட கொஞ்சம் நாம் நிமிர்ந்து உட்காருகிறோம். அவ்வளவுதான்.. இவருக்கு குழந்தை மேல் பாசம் பீறிட, குழந்தையை கொல்ல வில்லன் ஒருபுறம், போலீஸ் ஒருபுறம் என பல்வேறு படங்களில் பல்வேறு சூழலில் பார்த்த காட்சிகள்தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அவ்வளவுதான், அப்புறம் கிளைமாக்ஸ் வந்துவிடுகிறது.


இப்போதெல்லாம் பல தமிழ்படங்களின் மேக்கிங் ஆகச்சிறப்பாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இந்தப்படமும் அந்த வரிசையில் ஒன்று எனவும் சொல்லிவிடமுடியவில்லை. ஒரு காட்சியில் மழையில் போலீஸ் துரத்த ஹீரோ ரொம்ப நேரமாக ஓடிவரும் காட்சி என்னவோ ஸ்டூடியோவுக்குள் எடுத்திருப்பார்களோ என எண்ணவைத்தது. படத்தின் சிறப்பான விஷயமாக எனக்குப் படுவது கலை மற்றும் பின்னணி இசை (நல்ல வேளையாக பாடல்கள் இல்லை) ஆகியன. நடிப்பைப் பொறுத்தவரை அமீர் திரைக்குப்பின்னால் இருந்துகொள்வது அவருக்கும் நல்லது நமக்கும் நல்லது. உடம்பை முறுக்கிக்கொண்டு ஒரே முகபாவத்தில் திரிந்துகொண்டிருப்பது இந்த காரெக்டருக்குப் போதும் என நினைத்துவிட்டார் போலும். ஒரே ஆறுதல் மதுமிதா, அவரது காரெக்டரில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், சிறப்பான பங்களிப்பு. ரிப்பீட்டு காரெக்டர்களில் பொன்வண்ணன் கடுபேற்றுகிறார். கதைக்குத் தேவை என்பதற்காக குழந்தையை ரொம்பத்தான் படுத்தியிருக்கிறார்களோ என்று சில காட்சிகளில் படுகிறது. குழந்தையின் அழுகுரலை ஒரு அளவுக்கு மேல் கேட்கவைத்து மனதை கஷ்டப்படுத்துகிறார்கள்.

சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது. கூர்ந்துகவனித்தால் அமீர் 50 அடிதூரம் வேகமாக ஓடினால் 50 நிமிஷம் மூச்சுவாங்குபவர் போல இருக்கிறார். ஆனால் நமது ஸ்டண்ட் டைரக்டர்கள் இருக்கும் போது என்ன கவலை? ஒவ்வொரு குத்திலும் ஒவ்வொருத்தரையும் பறக்கவைக்கிறார். அப்படியும் கிளைமாக்ஸில் வில்லனிடம் செமையாக மொத்து வாங்கி சிம்பதி கிரியேட் பண்ணிவிட்டு அப்புறமாக அவரை உதைக்கிறார்.

மொத்தத்தில் எந்த இடத்திலும் படத்தோடு ஒன்றி படம் பார்க்கமுடியவில்லை எனினும் படம் ஓகே ரகம். ஆங்காங்கே ரசனையான காட்சிகள், கிளைமாக்ஸ் கவிதையான போட்டோக்கள் என அமீரின் மீதான நம்பிக்கை ஒன்றும் பொய்த்துவிடவில்லை என்றுதான் சொல்வேன்...

இது Tsotsi என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று கூறும் கேபிள் சங்கரின் விமர்சனத்தை பார்க்கும் முன்னாடி வரையில்.

.

24 comments:

// அமீரின் மீதான நம்பிக்கை ஒன்றும் பொய்த்துவிடவில்லை என்றுதான் சொல்வேன்//

இதக்கேட்ட உடனே நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் நண்பா

//இது Tsotsi என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று கூறும் கேபிள் சங்கரின் விமர்சனத்தை பார்க்கும் முன்னாடி வரையில்.//

இதுக்கப்புறம்தான் புரிஞ்சது.

 

we expected this, thanks for the review. it looks like old poo vizi vaasalile film, satyaraj and 1 kid

 

//அமீர் திரைக்குப்பின்னால் இருந்துகொள்வது அவருக்கும் நல்லது நமக்கும் நல்லது//

இதை நான் ஆமோதிக்கிறேன்

//கொஞ்சமாகவாவது உருப்படியாக ஒரு காரியத்தை ஒருவர் ஏற்கனவே பண்ணித்தொலைத்திருக்கும் போது எதிர்பார்ப்பு வரத்தானே செய்கிறது.//


நாங்க கூட அப்ப‌டித்தான் உங்க‌ள ந‌ம்பீ.....வ‌ர்றோம் (த‌ங்க‌ம‌ணிக்காக)
ஆனா நீங்க தீடிர்னு ஹாலிடேஸ்னு பதிவு போட்டு எங்க‌ள‌.......

 

நல்ல ஒரு பார்வையாளனின் விமர்சனம்.. ஆதி

 

//குழந்தையின் அழுகுரலை ஒரு அளவுக்கு மேல் கேட்கவைத்து மனதை கஷ்டப்படுத்துகிறார்கள்.//

யாரவது சொல்வார்கள் என்று பாரதக் கொண்டிருந்தேன் .

படம் பார்த்து வந்து இரவு முழுவதும் அந்த குரல் தான் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

இதை உடனடியாக பதிவிட தோன்றினாலும் அடுத்த "உன்னைப் போல் ஒருவன் " ஆகிவிடும் என்றெண்ணி பதிவிடவில்லை.

அதுவும் அந்த கட்டெறும்பு ஊறும் காட்சியில் மிக உண்மையாய் எறும்புகள் ஊறும் போது மனசு பட்ட வேதனைக்கு அளவே இல்லை.

இதை யாராவது கேட்டால் அமீர் , இது இயக்குனர் முடிவு என்றும் படத்துக்கு தேவை என்றும் சொல்வார் .

இதை எல்லாம் விட இவர் குழந்தையிடம் காட்டும் சேட்டைகள் ,,,,நிச்சயம் குழந்தையின் பெற்றோர் மேல் கோவம் வந்தது.
காசுக்காக மனிதன் என்ன வேண்டுமானால் செய்வான் என்று தோன்றியது,
ஒரு கழுதை கொடுமைப்பட்டு இருப்பது போல் காட்சி இருந்தால் சென்சார் வெட்டுவார்களாம்.
அதை விடவா அக்குழந்தை கேவலம்.
இதை எல்லாம் விட இவர் அக்குழந்தையை தூக்கிபோட்டு ஆடும் நடனம் இருக்கே .......

மனசு முழுதும் வலி..

இந்த படைப்பாளிகள் இன்னும் என்ன வேண்டுமானால் செய்வார்கள் காசுக்காக,,,

இதற்கு ?:" தமிழன் " என்ற வேசங்கள் வேறு.

அமீருக்கு திருமணமாகி ஒரு குழந்தையினை பெற்றால் நான் சொல்லும் வலி புரியும்.

மேனகா காந்திகள் எல்லாம் ௫ அறிவுக்கு மட்டும் தான் போல .

எதுவும் அறியாத அந்த குழ்ந்தை என்னடா பண்ணுச்சு

அமீர், ஒரு ஆங்கிலப் படத்தினை அப்படியே சுட்டு ஒரு குழந்தையை இப்படி கொடுமைப் படுத்தி .......வெற்றிப் படம் எடுத்து இன்னும் ஒரு சேரனாக வாழ்த்துகள்.

 

//இப்போதெல்லாம் பல தமிழ்படங்களின் மேக்கிங் ஆகச்சிறப்பாக இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இந்தப்படமும் அந்த வரிசையில் ஒன்று எனவும் சொல்லிவிடமுடியவில்லை//


//கிளைமாக்ஸ் கவிதையான போட்டோக்கள் என அமீரின் மீதான நம்பிக்கை ஒன்றும் பொய்த்துவிடவில்லை என்றுதான் சொல்வேன்...
//

விமர்சனம் ஒரே கொயப்பமா கீதே !!!! பாக்கலான்றீங்களா இல்ல பர்மா பஜார்ல 5.1 ரிலீஸ் ஆனதுக்கப்புறம் ட்ரை பண்ணலாம்றீங்களாஆ ??

 

இந்த‌ ப‌ட‌த்தைப் பார்த்து அமீரின் மீது வைத்திருக்கும் ந‌ம்பிக்கையை குலைத்துக்க கொள்ள‌ விரும்ப‌வில்லை. க‌ண்ண‌பிரானுக்கு வெயிட்டிங்.

 

ம்ம்ம்.... சூடா போட்டுட்டீங்க.... சுமாராத்தான் இருக்கு போல...

 

//இந்த‌ ப‌ட‌த்தைப் பார்த்து அமீரின் மீது வைத்திருக்கும் ந‌ம்பிக்கையை குலைத்துக்க கொள்ள‌ விரும்ப‌வில்லை. க‌ண்ண‌பிரானுக்கு வெயிட்டிங்//

அதேதான்....

 

5.1 series கொண்டு வர்றவிங்க லிஸ்ட் லயும் கடசீலதான் சொல்லனும் போலங்க

என்ன செய்ய நல்ல இயக்குனருங்க எல்லாம் பேர கெடுத்துக்குறாங்க சேரன் இப்பொ அமீர்

ஹ்ம்ம்
:(

 

//க‌ண்ண‌பிரானுக்கு வெயிட்டிங். //

கண்ணபிரான் எந்த படத்தோட காப்பியோ?:)

காப்பி அடிங்க வேண்டாங்கல, அதுக்காக ரீமேக் செய்வது மாதிரி சீனுக்கு சீனா காப்பி அடிப்பீங்க?

 

இன்றுதான் முதல்முறை உங்க ப்ளாக்கைப் பார்த்தேன், வெரி நைஸ்! முக்கியமா உங்க ஓவியங்கள்....superb! நானும் வரவேன் என்பதால் இத்துடன் அதன் லின்க் இணைத்துள்ளேன்.
http://enmanadhilirundhu.blogspot.com

 

(கேபிள், பூச்சி மற்றும் ஆதி) உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு?

ஒரு கேள்வி:

அமீரின் பருத்திவீரன்னா
சுப்ரமணியசிவாவின் யோகிதானே சரி?

என்ன சகா சரிதானே?

 

ம்ம்ம் இந்த விமர்சனங்களையோ - அதற்கு வரும் மறுமொழி களையோ வைத்து படம் பார்க்க வேண்டுமா வேண்டாமா எனத் தீர்மானிக்க் இயல்வில்லை.

நல்வாழ்த்துகள்ஆதி

 

அஹா நீங்களும் இந்த கொடுமையை பார்த்திங்களா...
விமர்சனம் நச்.

 

I've not watched the movie, not sure if i would. But complaining the movie being a copy cat of Tsotsi seems to be too much. People are critical and complaining, of too many things in this movie, when they accepted almost everything they are accusing about this movie when it came from others in other movies.

What about Avvai Shanmugi, Panchathanthiram, there are many more copy cats from lots of big guys like Kamal, Manirathnam, Shankar etc, you are saying because these movies are copy cat, one shouldnt watch?

I feel like something more is running behind all these reviews, rather just movie review.

One of the things might be that people expected the same kinda aura like Paruthiveeran in this movie and they are not getting it and complaining.

 

//ரௌடி ஹீரோ.. (என்னது ஒரே வார்த்தையில் கொட்டாவி விடுகிறீர்கள், பொறுங்கள் ஐயா..)//

என்னத்த சொல்ல!

//பல்வேறு படங்களில் பல்வேறு சூழலில் பார்த்த காட்சிகள்தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது.// ஆமாண்ணே!

 

அய்யா ஜாலி.. அபப்டியே அமீரின் தொலைக்காட்சி பேட்டிகளை பாருங்க. தள்பதிகளும், ஸ்டார்களும் எவ்வளவோ தேவலை. எங்களுக்கு வர்றத நாங்க பண்றோம்ன்னு சொல்றாங்க. இவரு பெரிய இவரு மாதிரி வந்தாரு..

 

எதிர் பார்த்தது தான்..
பில்டு-அப் கொடுக்கறதுல மட்டும் தான் நம்மாளுங்க தெறம காட்டுவாங்க..

 

நன்றி அகல்.!
நன்றி குப்பன்.!
நன்றி கரிசல்.!
நன்றி தமிழி.!
நன்றி செய்யது.!
நன்றி இலக்கியன்.!
நன்றி சிவா.!
நன்றி மகேஷ்.!
நன்றி நேசமித்திரன்.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி குசும்பன்.!

நன்றி பிரியா.! (பார்த்தேன், பின்னூட்டமிட்டிருக்கிறேன். தொடர்ந்து ஓவியம் வரையுங்கள்..வாழ்த்துகள்)

நன்றி முரளிகுமார்.! (இங்கதான் யாரு சீனியரோ, அவுங்கதான் ஃபுல்லா டாமினேட் பண்ணியிருப்பாங்களே.. அதுதானாலதான் அப்படி சொல்றது)

நன்றி சீனா.!
நன்றி ஜெட்லி.!

நன்றி ஏதுமில்லை.! (கருத்துகளை ஏற்கிறேன். பருத்திவீரன் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு என்றுதான் நானும் சொல்லவந்திருக்கிறேன்)

நன்றி ஊர்சுற்றி.!
நன்றி கார்க்கி.!

நன்றி மணிகண்டன்.! (கரெக்டா சொன்னீங்க)

 

//இது Tsotsi என்ற படத்தின் அப்பட்டமான காப்பி //

இந்த மாதிரி ஆங்கிலப் படங்களின் ரீ-மேக் (ஹி..ஹி) தமிழில் எடுப்பது என்னைப் போன்ற ஆங்கிலப் படம் பார்க்காத (இங்கிலீஸ் தெரியாதுல்ல..) தமிழ்ப் பற்றாளர்களுக்கு அவசியம். அதனால் அவர்களைத் திட்டாதீர்கள்!! ;-D

 

நானும் எதிர்பார்த்தேன் தான்

பகிர்வுக்கு நன்றி

 

ஹுஸைனம்மா (இதுவும் நியாயமான பாய்ண்டாத்தாம் இருக்குது), மண்குதிரை இருவருக்கும் நன்றி.!