2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
ஒரு சில புத்தகங்களையும் திரைப்படங்களையும் தேடி படிப்பதும் பார்ப்பதும் உண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் கடைக்கு (அ) இணைய புத்தக விற்பனை தளங்களுக்கு சின்ன விசிட் அடிக்கச் சென்று அப்படியே வாங்குவதுதான் அதிகம். அதனாலேயே அந்த விசிட்களை தவிர்க்கின்ற அளவுக்கு அடிக்ட். இந்த விழாவில் கண்டிப்பாக வாங்கப்போகும் புத்தகங்கள்:
1. கல்கியின் பொன்னியின் செல்வன்
2. இரா.முருகவேள் மொழிபெயர்த்துள்ள விடியல் பதிப்பகத்தின் "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்"
3. ரஹோத்தமன் எழுதிய கிழக்கு வெளியீடான "ராஜிவ்காந்தி படுகொலை வழக்கு"
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
சிறு வயதுகளில் நான் படிக்கும் ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்திக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு.
ஆனால் எழுத்தாளர் தன் எழுத்துகளின் மூலம் கட்டமைக்கும் பிம்பத்திற்கும் உண்மைக்கும் தொலைவு பெரும்பாலும் அதிகம் என்பது புரிந்தபின் இப்போதெல்லாம் ஆசைப்படுவதில்லை.
ஆதர்ச எழுத்தாளர் என்று யாரும் இல்லை. சுவாரசியமாக எழுதும் அனைவரையும் பிடிக்கும், வலையுலக எழுத்தாளர்கள் உட்பட.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)
சமீபத்தில் படித்த பொன்னியின் செல்வன். ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுடன் கற்பனையைக் கலந்து கொஞ்சமும் சுவாரசியம் குன்றாமல் 2500 பக்கங்களுக்கு ஒரு கதையை தமிழில் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.மற்றபடி மறக்கவியலாத நினைவு என்பது விகடன் இதழில் என் முதல் சிறுகதை வந்ததை சொல்லலாம்.
*******************************************
கல்யாண்ஜியின் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ மற்றும் கவிதைகள்
ஆதவனின் என் பெயர் ராமசேஷன்
இன்னொரு புத்தகம்: லிஃப்கோவின் ஆங்கில-தமிழ் அகராதி
2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
அப்படி வருவதாயின் உயிர்மையின் புதிய புத்தகங்களை அலசி வாங்க ஆசை. அப்புறம் நம் பதிவுலக நண்பர்களின் புத்தகங்களை, புத்தக ஸ்டால்களில் பார்க்க (வாங்கவும்தான்) ஆசை. அந்தப் பரவசமே தனி. இதை பாலபாரதியின் புத்தகம் வந்தபோது ஈரோடு திருவிழாவிலும், லக்கியின் புத்தகம் வந்தபோது திருப்பூரிலும் உணர்ந்திருக்கிறேன். இப்போது நர்சிம்.
அப்புறம் நகுலன் கவிதைகள் முழுத்தொகுப்பு.
4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

முதன் முதலில் நான் வாசித்த கதைப்புத்தகம் "சிறுவர்மலர்". எங்கள் வீட்டில் அப்போது செய்தித்தாள் வாங்குவதில்லை. பக்கத்துவீட்டிற்கு வரும் சிறுவர்மலரை படிக்க எனக்கும் என் அண்ணனுக்கும் பெரிய போட்டியே நடக்கும்.வெள்ளிக்கிழமை என்றாலே சிறுவர்மலரும் "ஒலியும் ஒளியும்" தான் அப்போதைய பேரானந்தங்கள்.
பதின்ம வயதில்:
இரும்புக்கை மாயாவியும், அப்போதைய சோவியத் யூனியனிலிருந்து எங்கள்வீட்டிற்கு வந்த ஒரு ருஷிய காமிக்ஸும். பெயர் நினைவில் இல்லை.
கல்லூரிக்காலங்களில்:
தீவிர இலக்கிய வாசிப்பு அறிமுகமானது கல்லூரியில்தான். ஜெயகாந்தன்,கல்கி,புதுமைப்பித்
பணிபுரியும் தற்காலத்தில்:
வெகு நாட்களாக வாசிக்க நினைத்து முடியாமல் போன வண்ணநிலவனின் "கடல்புரத்தில்" நாவலும்,கி.ரா வின் "பிஞ்சுகள்" நாவலும் மனதை கவர்ந்த படைப்புகள். மனதில் தங்கிய படைப்பாக கண்மணி குணசேகரனின் "அஞ்சலை"யும் யுவன் சந்திரசேகரனின் "ஒளி விலகலும்"
உயிர்மை பதிப்பகம்:
1. நகரத்திற்கு வெளியே - சிறுகதைகள் - விஜய் மகேந்திரன்
2.நீலநதி - சிறுகதைகள் - லஷ்மி சரவணக்குமார்
3.புதியகாலம் - கட்டுரைகள் - ஜெயமோகன்
4.வாசக பர்வம் - கட்டுரைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
5.நகுலன் வீட்டில் யாருமில்லை - சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
6.கெட்ட வார்த்தை - கட்டுரைகள் - சாரு நிவேதிதா
7.வேட்கையின் நிறம் - கவிதைகள் - உமா சக்தி
8.மஞ்சணத்தி - கவிதைகள் - தமிழச்சி தங்கபாண்டியன்
9.சைபர் சாத்தான்கள் - கட்டுரைகள் - வா.மணிகண்டன்
10.சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் - நாவல் - வா.மு.கோமு
11.கானல் வரி - குறுநாவல் - தமிழ்நதி
12.அதீதத்தின் ருசி - கவிதைகள் - மனுஷ்ய புத்திரன்
13.ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு - மொழிபெயர்ப்பு கவிதைகள் - யமுனா ராஜேந்திரன்
14.நீர்ப்பறவைகளின் தியானம் - சிறுகதைகள் - யுவன் சந்திரசேகர்
வம்சி பதிப்பகம்:
15.கிளிஞ்சல்கள் பறக்கின்றன - கவிதைகள் - வலைப்பதிவர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்புநூல்
16.மரப்பாச்சியின் சில ஆடைகள் - சிறுகதைகள் - வலைப்பதிவர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புநூல்
17.தனிமையின் இசை - அய்யனார்
காலச்சுவடு பதிப்பகம்:
சில புத்தகங்கள்
3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?
ஆதர்ச எழுத்தாளர் தமிழில் எஸ்.ரா, வண்ணதாசன் ஆங்கிலத்தில் ஓ.ஹென்றி. (இவை தற்காலிகமானது. வாசிப்பனுபவத்தை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் )
54 comments:
300க்கு வாழ்த்துக்கள்...
300 ஆவது "அதிரடி" பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!
வாசகர்,பதிவர்,எழுத்தாளனின் பரந்து பட்ட பார்வையை
பரிமாறியதற்கு உங்களுக்கொரு சபாஷ் !!!
நல்ல முயற்சி !!
300 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்,..
நான் அப்பவே சொன்னேங்க ஆதி. நான் இன்னும் பிரபலம் ஆகலைன்னு. பசங்க கேட்டாதானே! :) :) :)
--
ட்ரிபிள் சென்சுரிக்கு வாழ்த்துகள்! :)
300க்கு வாழ்த்துகள். பேட்டி அருமை.
300,,,, க்கு வாழ்த்துக்கள்
பரிசலாரின் பேட்டியும் லக்கியின் பேட்டியும் ரசித்து படித்தேன்...!
முந்நூறு இடுகைகளை
முத்தாய்ப்பாய் அளித்திட்ட
என்னினிய நண்பா நீர்
இன்னும் பல எழுதிட்டு
ஐநூறு ஆயிரமாய்
அழகாய் அளித்திடவே
எந்தை வேலை வணங்கி
இதயமாற வாழ்த்துகிறேன்.
பிரபாகர்.
பேட்டி அருமை.
300க்கு வாழ்த்துக்கள்.
அன்பின் ஆதி
முத்தான முன்னூறுக்கு நல்வாழ்த்துகள் பாராட்டுகள்
பதிவர்களின் பேட்டி அற்புதம் - தொகுத்தமையும் நன்று
நல்வாழ்த்துகள் ஆதி
பேட்டி வடிவில் நல்ல சுவாரசியமாக தந்து இருக்கிறீர்கள்.. நன்றி!
//கடைசிவரை நேரில் சந்திக்க இயலாமல் போனவர் சுஜாதா//
இன்னும் கொஞ்ச நாள் இருந்து இருந்தால் தான் என்னவாம் :(
300க்கு வாழ்த்துக்கள்..தொடந்து கலக்குங்க ஆதியண்ணே...
300க்கு வாழ்த்துகள்
//(ராஜேஷ்குமார், சுபா & பிகேபி//
நீங்களும் நம்ம கட்சியா :) :)
300kku வாழ்த்துக்கள்.
300 ஆஆஆஆஆஆஆஆஆஆ.... 300 முறை கைகுலுக்குகிறேன் ஆதி.. பாராட்டுகள்..
பிரபலங்களின் (ஹி..ஹி..) பேட்டி நல்லாவே வந்திருக்கு.. :)))
300 க்கு வாழ்த்துக்கள்
300க்கு வாழ்த்துகள் அண்ணே....
300 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அப்படியே இந்த கேள்விக்கு உங்க பதிலையும் போடுங்க....
வாசகர் விருப்பம்...
300 kku vaalthugal :)
300 வது இடுக்கைக்கு எனது வாழ்த்துக்கள்........
அருமையான தொகுப்பு.
மனிதர்களைப் படிப்பது வெகு சுவாரசியமானதே!!!!
முன்னூறாமே???? இனிய பாராட்டுகள்.
300க்கு வாழ்த்துகள். பேட்டிகள் நன்றாக இருந்தன.
300க்கு வாழ்த்துகள்.
வெண்பூ... பெரிய சிறுபத்திரிகை ஆசிரியர் ரேஞ்சுக்கு பேட்டி கொடுத்திருக்கீங்களே.. மேலுக்கு சுகமில்லையா தலைவா? வார்த்தைகள் எல்லாம் படு பயங்ங்ங்ங்கரமாவுல்ல இருக்கு..ஆத்தீ..
//பதின்ம வயதுகளில்//
//தன் எழுத்துகளின் மூலம் கட்டமைக்கும் பிம்பத்திற்கும் உண்மைக்கும் தொலைவு பெரும்பாலும் அதிகம் என்பது புரிந்தபின் இப்போதெல்லாம்//
டிக்கி டிக்கி டியாண்டோய்ய்..வெண்பூ
300-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஆதி.
300க்கு வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.!
நன்றி கனவுகள் விற்பவன். (நல்லா யாவாரம் ஆவுதா?)
நன்றி செய்யது.
நன்றி ஜோதி.
நன்றி பாலா.
நன்றி வானம்பாடி.
நன்றி வசந்த்.
நன்றி பிரபாகர். (அதுக்கு பேஏர் என்னது? கவுஜையா? :-)
நன்றி அம்மிணி.
நன்றி சீனா.
நன்றி பிரசன்னா. (இவர்கள் மட்டுமல்லாது இனிவரும் பகுதிகளிலும் சுஜாதாவே அதிகமாக நினைவுகூறப்பட்டுள்ளார்.
நினைச்சாலே ஆத்திரமாக வருகிறது. இன்னும் கொஞ்சநாள் இருந்து தொலைத்திருந்தால்தான் என்ன.?)
நன்றி நாடோடி.
நன்றி கார்க்கி.
நன்றி புரூனோ.
நன்றி கேபிள்.
நன்றி வெண்பூ.
நன்றி கரிசல்.
நன்றி ஜெட்லி.
நன்றி எறும்பு.
நன்றி அப்துல்லா.
நன்றி சங்கவி.
நன்றி துளசி மேடம். (என்ன ஆமே.? நம்புங்க ஆம்தான்.! :-)
நன்றி வித்யா.
நன்றி நர்சிம். (:-))
நன்றி துபாய்ராஜா.
தமிழ்மணத்துல 3 ஓட்டு விழுந்திருக்குது. அப்படியே இன்னும் ஒண்ணு யாராவது போட்டீங்கன்னா பரிந்துரையில வந்துடும். பண்ணிவிடுங்க, என்ன பண்றது?
வாழ்த்துக்கள் ஆதி!!!
பரிசலின் ஆதர்ச எழுத்தாளரும் சுஜாதா என்றுதான் நினைக்கிறேன் - தனது வலது மற்றும் இடது மூளையை (Creative and analytical side of brain) சமமாக பயன்படுத்தியவர்.
-- ப்ரியமுடன் பாலா
இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன் ஆதி. 300க்கு வாழ்த்துகள்.நன்றியும் :)
பகுதி 2க்காக காத்திருக்கிறேன்.
300க்கெல்லாம் வாழ்த்து சொல்லப் போவது இல்லை. இன்னும் நீங்க அடிச்சு ஆடுங்க..
சிறப்பான தொகுப்பு.. நன்றி ஆதி
300க்கு வாழ்த்துகள்
நிலா ரசிகனின் பதில்கள் உபயோகமானது. லக்கியின் பதில்கள் சுவாரசியம். மற்றவை!!!
பிரபல பதிவர்கள் எல்லோருமே நல்ல வாசிப்பனுபவமும் கொண்டிக்கணும்ன்னு எதாவது கட்டாயமா என்ன ;-)?
300க்கு வாழ்த்துகள்
//அப்படி ஒரு புத்தகம் ’கோட்ஸ்டாண்ட் கவிதைகள்’ உட்பட நகுலனின் கவிதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு.//
பரிசல், கடந்த ஆகஸ்ட் வரையில் நகுலனின் கவிதைகள் முழுத் தொகுப்பாக வெளிவரவில்லை என்றே நினைக்கிறேன். அதற்கு பின்னர் வந்திருந்தால் உங்கள் நண்பர் வாங்கித் தர வாய்ப்புண்டு. நகுலனின் பெரும்பாலான புத்தகங்கள் நியு புக்ஸ்லேண்டிலேயே கிடைக்கிறது.
நிறைய நல்ல நண்பர்களை பெற்றுள்ளீர்கள் இமாலய 300க்கு வாழ்த்துகள் ராகுல சங்கிருத்தியான்
எழுதிய “சிந்து முதல் கங்கை வரை”
அருமையான புத்தகம்.
முதல் படத்தில் இருக்கும் ஈரோ ஆரு?
மலையாள பர ஈரோ(ஹீ இல்ல) மாதிரியே இருக்காரு:)))
3000க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
நன்றி பாலா.
நன்றி நிலா.
நன்றி சென்ஷி.
நன்றி பாபு.
நன்றி கேவிஆர்.
நன்றி வெங்கட்.
நன்றி குசும்பன்.
அன்பு நண்பர்களே.. இந்தத்தொகுப்பு இன்னும் 3 (அதாவது மொத்தம் 4) இன்றும் நாளையும் வெளியாகலாம். தொடர்ந்து ஆதரவு தரவும். பின்னூட்டமிடும் நண்பர்கள் அவர்களால் மறக்க இயலாத புத்தகங்களை பகிர்ந்துகொண்டால் அவற்றை இறுதிப்பாகத்தில் தனியாக நோட் செய்யலாம் என்றிருக்கிறேன். புதிதாக வாசிக்கத்துவங்கியவர்களுக்கு உதவியாக இருக்கலாம். நன்றி.
அவ்வ்வ்வ்.. நானும் Proble பதிவராகிவிட்டேனா? இந்தப்பதிவுக்குப்போய் ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருக்குது.? :-((
முன்னூறு விரைவில் ஆயிரம் தொட என் அன்பான வாழ்த்துக்கள்!
300வது பாலோயராக சேர வேண்டும் என்று காத்திருந்தேன். கரெக்டாக கோவை சென்றபோது 300 காலி (வட போச்சே) சரியாக அப்செட் ஆகிவிட்டேன். பராவாயில்லை இந்த 300ரிலாவது கலந்துகொள்கிறேன். வாழ்த்துக்கள்!
300க்கும் அதிரடி பேட்டிக்கும் பூங்கொத்து!
//ஆதிமூலகிருஷ்ணன் அவ்வ்வ்வ்.. நானும் Proble பதிவராகிவிட்டேனா? இந்தப்பதிவுக்குப்போய் ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருக்குது.? :-((
//
யோவ் யாருய்யா உங்களுக்கு எல்லாம் இதை சொல்லிக்கொடுத்தது, கீழே இருக்கிறவன் மேலே வரனும் என்றால் உன்னை கீழே இழுத்துதானே ஆகனும்...அப்படி ஒருசிலர் இருக்கிறார்கள். உன்னை போட்டுவிட்டு மேலே வருவார்கள்!
சும்மா பச்சபுள்ள மாதிரி இருந்துக்கிட்டு நாமும் பிராபள பதிவர் ஆயிட்டோம் என் கனவில் மிதக்காதீர்...அதுக்கு எல்லாம் முகத்தில் நாலு தழும்பு, நெஞ்சில் ரெண்டு கத்தி குத்து எல்லாம் இருக்கனும் ஓக்கேவா.
ராமலக்ஷ்மி,
அருணா,
ஜெயந்தி (எவ்ளோ நாளா கோவையில் இருந்தீங்க?? விளையாடுறீங்களா? 300 வர்றதுக்கு நான் என்னா கஷ்டப்பட்டேன் தெரியுமா? கோழி அடைகாப்பது போல ரிப்ரெஷ் பண்ணி பாத்துக்கிட்டேயிருந்தேன் :-()
அனைவருக்கும் நன்றி.
அப்புறம் ஒரு சேதி.. ரெண்டாவது பாகத்தையும் போட்டாச்சு.!
அதானே பாத்தேன். ரவுடின்னா ஒத்துக்க மாட்டீங்களே.! (ROTFL Kusumban.!)
நிலா ரசிகன் சொல்லி இருக்கும் புத்தகங்களின் தலைப்பே ரொம்ப சுவரசியம்மா இருக்கிறது . எப்படியும் இந்த தடவை 10 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று இருக்கிறேன்.
எனது லிஸ்ட் இதுதான்
1. ஏழாம் உலகம் - ஜெயமோகன்
2. காமருப கதைகள், கெட்ட வார்த்தைகள் - சாரு
3. யாமம் - ராமகிருஷ்ணன்
4. கிழக்கு பதிப்பகத்தின் இருந்து 4 புத்தகங்கள்.
5. பூக்களிலிருந்து புத்தகங்கள்
சிறப்பான பணி!
பலமுறை பல இடங்களில் இதுபற்றிச் சொல்லியிருக்கிறேன். சென்றமுறை அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் நடத்திய விழாவில் பேசும்போது கூட..// excellent parisal..
Anna Good work...! impressive...!
300க்கு வாழ்த்துகள் ஆதி.
வித்தியாசமான பதிவு. அதுவும் புத்தகத் திருவிழாவின்போது இத்தகைய பதிவு வருவது டாபிகல்.
அடிச்சு ஆடறீங்க!
நானே ஐம்பதாவது கமெண்டையும் போட்டுடறேன்..
@ கேவிஆர்
சென்றவருடன் சென்னை சென்றபோது முழுத்தொகுப்பு வந்திருப்பதாய் ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னார். அதனால்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அ.மு.செய்யது said...
December 28, 2009 1:03 AM 300 ஆவது "அதிரடி" பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!
வாசகர்,பதிவர்,எழுத்தாளனின் பரந்து பட்ட பார்வையை
பரிமாறியதற்கு உங்களுக்கொரு சபாஷ் !!!
நல்ல முயற்சி !! //
வழிமொழிகிறேன்.
வித்தியாசமான மற்றும் உபயோகமான பதிவும் கூட.
நன்றி ரோமியோ.!
நன்றி வால்பையன்.!
நன்றி செல்வேந்திரன்.!
நன்றி பரிசல்.! (மீ த 50ஐ நைஸா போடுறீங்களா? பாரா கிட்ட சொல்லிக்குடுக்கிறேன் இருங்க)
நன்றி அமித்துஅம்மா.!
ஒரு சீரீஸ்ல நாலு பாகங்களை ஒரே நாள்ல நான் படிச்சதே இல்ல. இதான் முதல் முறை. மொத்தமா படிக்கும்போது பெரும்பாலானவர்கள் பதில்கள்ல இருக்கற சிமிலாரிட்டீஸ் தெரியுது. ஒரு தலைமுறையையே பாதிக்கற அளவு எழுதிருக்கற எழுத்தாளர்கள்... பெரிய விஷயம்.
நல்ல தொகுப்புங்ணா. நான் என்ன புக் வாங்கறதுன்னு இப்போ குழப்பாமாகிடுச்சு.
//'சாரு'வை ஆதர்ச எழுத்தாளர் என்று சொல்லமாட்டேன். அவர் கடவுள்.//
கடவுளை செருப்பால் அடித்த பகுத்தறிவுச் சிங்கம் பெரியார் ஞாபகம் ஏனோ இப்போது வந்துத் தொலைக்கிறது!!! :)
அவர் அடித்தது கடவுளை அல்ல! கடவுள் சிலையை என்று பகுத்தறிவு சோதரர்கள் கருத்து சொல்லி அவமானம் தேடிக்கொள்ள வேண்டாம்!
Post a Comment