இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் கேகே நகர் 'புக் பேலஸி'ல் நடக்கவிருக்கும் 'அகநாழிகை' பதிப்பக புத்தகவெளியீட்டு விழாவில் 7 புதிய புத்தகங்கள் வெளியாகவிருக்கின்றன. பதிவர்கள் புடைசூழ விழா ஒரு கோலாகலமான பதிவர் சந்திப்பாகவும் மலரும் என நம்புகிறோம். அனைவரையும் அகநாழிகையின் சார்பில் வரவேற்கிறோம். விழாவில் வெளியாகவிருக்கும் புத்தகங்களில் ஒன்று நண்பர் நர்சிம்மின் 'அய்யனார் கம்மா' சிறுகதைகள் தொகுப்பு.
நேற்று புத்தகம் பிரிண்டில் இருந்து வந்த சூடு ஆறுமுன்பே புத்தகத்தைக் காணும் ஆவலில் போன்கால்கள் பறக்க திடுமென ஏற்பாடாகியது ஒரு பதிவர் சந்திப்பு. நான்கு பேர் ஐந்து பேர் ஆறு பேர் என எண்ணிக்கொண்டே போக கடைசியில் நிகழ்ந்தது அந்த பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பு தி.நகர் அருணா உணவு விடுதியில். பைத்தியக்காரன், பொன்.வாசுதேவன், சுகுணாதிவாகர், லக்கிலுக், அதிஷா, கேபிள்சங்கர், தண்டோரா, டாக்டர் புரூனோ, யாத்ரா, ச.முத்துவேல், எம்.எம்.அப்துல்லா, கார்க்கி, வெண்பூ, முரளிகண்ணன், காவேரிகணேஷ், அதிபிரதாபன், சூர்யா (யாரையாவது விட்டுட்டேனா? ஹிஹி) ஆகியோர் கலந்துகொள்ள பிரம்மாண்ட விருந்துடன் நிகழ்வு நடந்தேறியது.
பிறந்தநாள் கேக்கை வெட்டும் நிகழ்ச்சியைப்போல புத்தகக்கட்டை யார் பிரிக்கப்போகிறார்கள் என்ற ஆவலில் விழாநாயகன் நர்சிம்மை பார்த்தபோது அவர் எங்களுக்கு உணவளித்த விடுதி சிப்பந்தியை பிரிக்கச்சொல்லி நெகிழச்செய்தார். அந்த இனிய கார்த்திகைத்திருநாளில் புத்தகத்தின் பிரதிகளை சுகுணாதிவாகர், தண்டோரா ஆகியோரைத்தொடர்ந்து அனைவரும் பெற்றோம். மிக அழகான அட்டைப்படத்துடன், நர்சிம்மின் 13 கதைகளுடன் புத்தகம் மிளிர்ந்தது (கதைகள் குறித்த விமர்சனப்பதிவு பின்னர்).
பின்னர் அவரவர் விருப்பங்களில் அவரவர் பாய்ந்தோம். பைத்தியக்காரன் புத்தகத்தை புத்தகத்தை ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்க, கேபிள்சங்கரும், அண்ணன் தண்டோராவும் பூஸ்ட் பானத்தை ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்க, நானும், வெண்பூவும் உணவு வகைகளை ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கவென.. நிகழ்வு துவங்கியது. ஏற்கனவே நண்பர்களாக இருந்த ஓர் இளம் கவிஞர் கூட்டமே சமீபத்தில் வெற்றிகரமான திரைப்பட பாடலாசிரியர்களாக களம் கண்டதைப்போல பதிவுலகத்திலிருந்து ஒரு புதிய எழுத்தாளர் கூட்டம் வெளிவரவேண்டும் என்றொரு எண்ணம், ஆசை உண்டு எனக்கு. இந்த நிகழ்வைப்பார்த்த போது அந்த நம்பிக்கை அதிகரித்தது. கலகலப்பு, உற்சாகம், சிரிப்பு என சந்திப்பு சுமார் 11 மணிக்கு நிறைவடைந்தது.
முதல் புத்தகத்தை கண்ட மகிழ்வில் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு இருந்தார் நர்சிம். அவருக்கும் நம் அனைவரின் சார்பாகவும் இன்னும் உயரங்கள் பல தொட எனது நல்வாழ்த்துகளை இங்கே பதிகிறேன்.
கலந்துகொண்ட அனைவரின் சார்பாகவும் சுகுணாதிவாகர் நர்சிம்முக்கு ஓர் அன்புப்பரிசை வழங்கினார். அது..
.
65 comments:
'அருணா உணவக'த்தில் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி! அகநாழிகை + நர்சிம் மேலும் வளர வாழ்த்துக்கள்
நான் பூஸ்ட் அருந்தவில்லை
வாழ்த்துக்கள் நர்சிம்! அட்டைப்படம் அருமை.
முன்கூட்டிய வாழ்த்துக்கள் ஆதி!
நர்சிம்முக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நர்சிம்
வாழ்த்துக்கள்...
தமிளிஷ் வோட்டு போட்டாச்சு
My Best Wishes to narsim.
நர்சிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இணையத்தின் வழியாக இந்த புத்தகத்தை வாங்குவதற்கு சுட்டி இருந்தால் தரவும்.
யாரையாவது விட்டுட்டேனா? ஹிஹி
அந்த பயம் இருக்கட்டும்.
எல்லா புகைப்படங்களை வெளியிட்டிருக்கலாம்.
நிறைய பதிவர்கள் தொடர்பாடல்கள் பாடினர்.
அப்துல்லா,கார்க்கி,சிவராமன்,யாத்ரா,முத்துவேல்,கேபிள் அங்கிள்,காவேரி கணேஷ்,முரளிகண்ணன் மற்றும் பலரின் குரல்களின் பாட்டு வெள்ளத்தில் மிதந்த காட்சிகள் நினைவில் நின்றவை.
1990 களின் கானா பாடல்கள் சுகுனா திவாகர்,அப்துல்லா,கார்க்கியால் பாடப்படும் போது அரங்கமே அதிர்ந்தது.
அந்தி சாய்ந்த பொழுதில் ரொம்ப நாள் கழித்து மனம் விட்டு சிரித்த நாள்.
அய்யனார் கம்மாவின் படைப்பாசிரியர் நர்சிமுக்கும், அய்யனார் கம்மாவில் நம்பிக்கை கொண்ட பதிப்பாளர் அகநாழிகைக்கும் வாழ்த்துக்கள்.
" அய்யனார் கம்மா" ஸ்ரீ ரங்கத்து தேவதைகளோடு இதையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் நர்சிம்.தங்கள் படைப்பு அச்சில் வருவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி ,வாழ்த்துகள்
அவ்வ்வ் புக் பேரே கொஞ்சம் கிலியா இருக்குதே...அவ்வ்வ்வ்
வாழ்த்துக்கள் நர்சிம்
//கலந்துகொண்ட அனைவரின் சார்பாகவும் சுகுணாதிவாகர் நர்சிம்முக்கு ஓர் அன்புப்பரிசை வழங்கினார். அது.. //
சீக்கிரம் ஆதியும் புத்தகம் எழுதனும் என்று சொன்னா...அது வாழ்த்தா ஆகுமா?:)))) என்ஜாய்:))
நண்பர் நர்சிமுக்கு என் வாழ்த்துக்களும்
ஓஹோ, இப்பதான் சென்னையில் ரிலீஸ் ஆகிறதா? நான் ப்ரிவியு பார்த்தாச்சு. பிரத்யேகக் காட்சி.
அருணா உணவகமா? நல்லா புனையராங்கையா புனைவு !
வாழ்த்துகள் நர்சிம்.
அனுஜன்யா
நூல் பல காண வாழ்த்துக்கள் நர்சிம்.
அட்டைப்படம் அழகாக இருக்கிறது.
நண்பர் நர்சிம்முக்கு நல்வாழ்த்துகள்.. அடுத்தது நீங்களா நண்பா?
ஆவலுடன்,
மா.கார்த்திகைப் பாண்டியன்
கதாசிரியர் நர்சிம்முக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நர்சிம் மேன்மேலும் படைப்புகள் வெளியிட்டு வளர வாழ்த்துக்கள்!!!
கேட்க மறந்துட்டேன், உங்க தங்கமணி பதிவெல்லாம் எப்ப அச்சில் வரும் ஆதி????? :))
அண்ணன் நர்சிம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சுகுணா அண்ணே... அன்னிக்கு உங்க
பவுடர் டப்பாவை காணும்னு என்னை போட்டு வறுத்து எடுத்தீங்களே...இப்ப தெரிஞ்சிருக்குமே... அட...மோந்து பார்த்து வேற கன்பார்ம் பண்ணிட்டீங்க தானே...
எப்பா என்னோட முதுகு தப்பிச்சது...
குசும்பன் said...
//கலந்துகொண்ட அனைவரின் சார்பாகவும் சுகுணாதிவாகர் நர்சிம்முக்கு ஓர் அன்புப்பரிசை வழங்கினார். அது.. //
சீக்கிரம் ஆதியும் புத்தகம் எழுதனும் என்று சொன்னா...அது வாழ்த்தா ஆகுமா?:))))*/
அன்னிக்கு நீங்க பல் வெளக்கிட்டு வந்து முத்தம் கொடுத்தா அது சாகித்ய அக்காடமிக்கு சமானம்.
நர்சிம்முக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள்....
நர்சிம்முக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள்....
இது நர்சிம் நன்றிசொல்லவேண்டிய பதிவென்பதால் நான் பின்னூட்டங்களுக்காக மொத்தமாக நன்றி சொல்லிக்கொள்கிறேன்..ஹிஹி..
அனைவருக்கும் அன்பான நன்றி.!
வாழ்த்துகள் நர்சிமுக்கு நன்றி உங்களுக்கு.
வாழ்த்துக்கள்....
வாழ்த்துகள் நர்சிம் !!!
வாழ்த்துக்கள் நர்சிம்..
Waiting for this post from morning !!
நீங்கள் அலைபேசியில் சொன்ன மறுகணத்திலிருந்து புத்தகம்
வாசிக்க வேண்டும் என்ற ஆவல் பீறிட்டு கிளம்பி விட்டது.
இப்போதைக்கு புத்தக அட்டையை மட்டும் பார்த்து பெருமூச்சு விட்டு கொள்கிறேன்.
மகிழ்ச்சி !!!
பிரபல பதிவர் என்ற அந்தஸ்திலிருந்து பிரபல எழுத்தாளர் என்ற அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கும் நமது நண்பர் நர்சிம்முக்கு வாழ்த்துக்கள் !!!
நர்சிம்முக்கு வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி ஆதி !
வாழ்த்துக்கள் நர்சிம்.
நண்பர் நர்சிமுக்கு வாழ்த்துக்கள்.
பல புத்தகங்கள் தொடர்ந்து வெளியிட வாழ்த்துக்கள் .
மிக மகிழ்வாக உணர்கிறேன்..
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி..
நன்றி ஆதி.
வாழ்த்துக்கள் நர்சிம்.
வாழ்த்துக்கள் நர்சிம்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
//1990 களின் கானா பாடல்கள் சுகுணா திவாகர்,அப்துல்லா,கார்க்கியால் பாடப்படும் போது அரங்கமே அதிர்ந்தது//
சுகுணா பார்த்தா அடிச்சிட போறாருங்க. அவர் பாடியது ம.க.இ.கவினரின் பாடல். நான் பாடியதுதான் கானா பாடல். கிகிகிகி
வாவ்... வாழ்த்துக்கள் நர்சிம். வாங்கி படிக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் நண்பர் நர்சிம்க்கும், அகநாழிகை பதிப்பகத்தாருக்கும்!!!
நரசிம் க்கு வாழ்த்துக்கள் .....
புத்தகம் பெரிய வெற்றி அடையும் என்ற எதிர்பார்புகளுடன்
மேவி காசி விஸ்வநாத தியாகராஜன்
தல நர்சிம்முக்கு மனமார்ந்த வணக்கங்கள்.....!
அகநாழிகையில்
அகத்தின் புறமாய்
நரசிம் எழுத்துக்கள் .....
நாளிகைகள் செல்ல செல்ல
துடிப்புடன் கண்கள்
கையில் புத்தகம் பிடிக்கும்
நாளை எதிர்பார்த்து
ரேட் எவ்வளவு ன்னு சொல்லவில்லையே
நண்பரே! அடிக்கடி சென்னையில் இல்லாமல் போய்விட்டோமே என்று நினைக்க வைக்கிறீர்கள்.:-(
நர்சிமிற்கு என் வாழ்த்துகள்
நர்சிம்முக்கு வாழ்த்துகள்.
இது என்ன முத்த வாரமா?
லதானந்த் சாருக்கு யாரோ ஒருவர், நர்சிம்முக்கு சுகுணா, அகநாழிகைக்கு பைத்தியக்காரன்.....
அருணா உணவகத்தில் பூஸ்டுக்காக வெயிட் செய்திருதோம் என்று சொல்லி என்னை இன்னும் யூத்தாக ஆக்கியதற்கு மிக்க நன்றி ஆதி..:)
//அடிக்கடி சென்னையில் இல்லாமல் போய்விட்டோமே என்று நினைக்க வைக்கிறீர்கள்.:-(//
Repeat.............
But I'll get double from Narsim for this...
NEXT? EAST!
அடடே... அப்படியா... கேட்கவே சந்தோசமாக இருக்கிறது. நர்சிமிற்கு வாழ்த்துக்கள், வாசுவிற்கு நன்றிகள்...
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நர்சிம்முக்கும், அவரை ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும்.
நர்சிம்முக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பகிர்ந்து கொண்ட ஆதிக்கும் வாழ்த்துக்கள்.
நண்பர் நர்சிம்முக்கும் அகநாழிகைக்கும் வாழ்த்துகள், நேற்றைய சந்திப்பு ரொம்ப நல்லா இருந்தது :)
அன்பின் நர்சிம்
நல்வாழ்த்துகள்
அன்பின் வாசுதேவன்
நல்வாழ்த்துகள்
அன்பின் ஆதி
நல்வாழ்த்துகள்
வாழ்த்துகள் நர்சிம்.
அப்புறம் ஆதி உங்க புத்தகத்தை நான் பப்ளிஷ் பண்ணலாம்னு இருக்கேன்.சீக்கிரம் ரெடி ஆகுங்க.
அப்துல்லா... என்னது என் புத்தகமா? ரொம்பக் கூச்சமா இருக்கு... சரி சரி... எத்தனை கவிதை, கதை வேணும்? சும்மா இதுகெல்லாம் போய் ஆதியை தொந்தரவு பண்ணிக்கிட்டு....
இப்ப என்ன விளையாடுறீங்க? லேடஸ்ட் கேமிங்குக்கு கான்ஃபிகரேஷன் வச்சிருக்கீங்களா?
ஆஹா வாழ்த்துக்கள். :) :)
அந்தி சாய்ந்த பொழுதில் ரொம்ப நாள் கழித்து மனம் விட்டு சிரித்த நாள்./// நன்றி காவேரி கணேஷ்.. அதே தான் நானும் சொல்ல நினைத்தேன்.
வெண்பூ வின் அதிரடி சிரிப்பலைகள் இன்னும் கேட்டு கொண்டே இருக்கிறது..
அப்துல்லா அண்ணனின் கலக்கல் பாட்டுகள்..
நன்றி ஆதி..
நர்சிம்க்கு வாழ்த்துகள்.
அனைவருக்கும் அன்பான நன்றிகள்.!
@அப்துல், மகேஷ் :
யோவ் இன்னா.. வெளாடுறீங்களா?
@பப்பு :
மெயிலுக்கு வாங்கன்னு கொட்டையெழுத்துல போட்டபிறகும் பின்னூட்டத்துல கேள்வி கேக்குறவங்களை என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கினுருக்கேன்.
ஹி... ஹி.... உணர்ச்சி வசப்பட்டுடேங்க!
வாழ்த்துகள் நர்சிம்.. :-D
Congrates Narsim!!
வாழ்த்துக்கள் நர்சிம்!
பங்ஷனுக்கு வராமலேயே இவ்ளோ கதை எழுத முடியுமா..? ஆத்தாடி ஆதியப்பூ.. நீ ரொம்ப சூப்பரப்பூ..!
உ.த.அண்ணே!!!! இது இதுதான் ”பஞ்ச்”. ஒண்ணு சொன்னாலும் உருப்படியா சொல்லி இருக்கீங்க அண்ணே!!!!
வாழ்த்துக்கள் நரசிம்.
நான் புதுசுன்னு என்னை கூப்பிடாம விட்டுட்டீங்களா? நானும் ஜோதியில் வந்து ஐய்கியமாயிருப்பேனே!!
Next meet பண்ணுவோம்.
பூங்கொத்து! கொஞ்சம் பொறாமையாகவே இருக்கிழ்ரது இப்பிடியெல்லாம் நீங்கள் எல்லாம் சேர்ந்து கொண்டாடுவதைப் பார்க்கும்போது..........
Post a Comment