அஞ்சாதே : சில சுவாரசியங்கள்

சமீபத்தில் ஒரு மாலைப்பொழுதில் ஒரு பிரபல தமிழ்சினிமா இயக்குனரை சந்திக்கச்சென்றிருந்தோம். நண்பர்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் என்பதால் ஓய்வாக இருந்த சமயத்தில் அவர் அழைக்கப்பட்டிருந்தார். நானும், இன்னொரு நண்பரும் அவருடன் இணைந்துகொண்டோம். எங்களை வரவேற்ற இயக்குனரின் உபசரணைகளும், பேச்சும் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருந்தது. மேலும், சில இயக்குனர்களையும், உதவி இயக்குனர்களையும் சந்தித்திருக்கும் அனுபவமும் நமக்குண்டு. பொதுவாக அதுபோன்ற சமயங்களில் அவர்களது பேச்சுக்கும், கண்களில் கனவுகளோடு அவர்கள் மூன்று மணிநேரம் சொல்லும் அடுத்த படத்துக்கான கதைக்கும் 'கலக்கல், சூப்பர்' போன்ற பின்னூட்டங்களைப் போல பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பிவிடலாம். அதற்கு மேல் ஒன்றுக்கும் அவசியமிராது. அவர்களுக்கும் மகிழ்ச்சி, நமக்கும் ஒரு விஐபியை சந்தித்த மகிழ்ச்சி என முடிந்துபோய்விடும். ஆனால் இந்த சம்பவம் அப்படியிருக்கவில்லை. அவர் அவரது உதவியாளர்களிடம் பழகும் விதம், நான் இதுவரை கேள்விப்பட்டிருக்காத ஒன்றாக இருந்தது. அவர்களோடு அவர் கலந்திருந்தார்.

எனக்கு கமர்ஷியல் பிடிக்கும்தான். ஆனால் கமர்ஷியல் என்ற போர்வையில் இப்போது சில தமிழ்சினிமா இயக்குனர்கள் பண்ணிக்கொண்டிருக்கும் அராத்து வேலைகள் சுத்தமாக பிடிப்பதில்லை. எனக்கு இலக்கியம் பிடிக்கும்தான். ஆனால் மிக ஆழமாக இருக்கும், அல்லது போலிகளை இனம்காணமுடியாத முன், பின் நவீனத்துவ இலக்கியங்களை பிடிப்பதில்லை. ஏனெனில் அது புரிவதில்லை. எழுத்தோ, சினிமாவோ என் புரிதலுக்கு உட்பட்ட, அழகியலுடன் கூடியவற்றையே நான் பெரிதும் விரும்புகிறேன். அவையே என்னளவில் இலக்கியம் ஆகின்றன.

அந்த இயக்குனரின் ஆர்வம், பேச்சு, புரிதல் அத்தனையும் எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக ஆளுமை மற்றும் கான்பிடெண்ட் வியப்புக்குரியதாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும் இருந்தது. ஒரே நாளில் ஒருவரை முழுவதுமாக அளவிட்டுவிடமுடியாதுதான். இருப்பினும் மிகுந்த நம்பிக்கை தருபவராக இருக்கிறார். மகிழ்வான அந்த நிகழ்வும், பேச்சும் மறுநாள் அதிகாலை வரை நீண்டது. நண்பர் அவரது முந்தைய படத்தின் காட்சிகளை ரசித்த விதத்தை விவரித்த போது மகிழ்வுடனும், ஆர்வத்துடனும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

பாதிக்குப்பின்னர் அவர், அவரது குழுவினருடன் இணைந்து ஒரு பெரிய இசைவிருந்தே தந்தார் அல்லது அவர்களுக்குள் அடிக்கடி நிகழும் இயல்பான நிகழ்வின் பார்வையாளர்களாக அன்று நாங்கள் இருந்தோம். புகழ்பெற்ற தமிழ் திரையிசைக்கோவைகளை, அவர்களது முந்தைய படங்களின்/ வருங்கால படங்களுக்கான இசைக்குறிப்புகளை கீ போர்டில் வாசித்து, உருவாக்கி உடன் பாடி மகிழ்ந்திருந்தனர். இசை குறித்த எனது அறிவு கேள்விக்குரிய ஒன்றென்பதால் வெறுமனே வியப்புடன் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஒரு புதிய மெட்டு ஒன்றை அவர்கள் கண்டுகொள்ள அந்த இயக்குனர் அதனுடனே அப்போதே ஒரு நல்ல கவிதை நயத்துடன் கூடிய பாடலையும் பாடிக்கொண்டே சென்றது பிரமிப்பின் உச்சம். உதவியாளர்கள் அவற்றை விடியோவாகவும், குறிப்புகளாகவும் பதிவு செய்துகொண்டேயிருந்தனர். ஆர்வமே (Passion) தொழிலாகவும் நேர்கையில் வரும் குதூகலத்தை நேரிலேயே சற்று பொறாமையுடன் கண்டுகளித்தோம்.

இறுதியாக விருந்தின் உச்சகட்டமாக, கடும் எதிர்பார்ப்பில் இருக்கும் இன்னும் ரிலீஸ் தாமதமாகிக்கொண்டிருக்கும் அவரது அடுத்த படத்தின் துவக்கக்காட்சிகளை சில நிமிடங்கள் கண்டோம். பெரும்பான்மையினரிடம் சிக்கிக்கொண்டு துன்புறும் தமிழ்சினிமாவை நல்ரசனையை நோக்கி திசைதிருப்பும் ஒரு சில இயக்குனர்களின் வரிசையில் இவரும் இணைந்திருக்கிறார். தமிழ்சினிமாவின் தவிர்க்க இயலாத ஓர் இடம் கிடைக்க அவருக்கும், அவரது குழுவினருக்கும் நமது நல்வாழ்த்துகள்.

அந்த இயக்குனர் 'மிஷ்கின்'.
நாங்கள் சிலாகித்த அந்தப்படம் 'அஞ்சாதே'.
சில நிமிடங்களே நாங்கள் கண்ட அந்தப் புதிய படம் 'நந்தலாலா'.

ஒரு முக்கிய பின்னிணைப்பு : மிஷ்கின் பின்னிரவில் அஞ்சப்பரில் இருந்து தந்தூரி சிக்கன் வரவழைத்து உபசரித்தார். அவ்வளவு டேஸ்டியாக இருந்தது. அதெப்படி நாம் எப்போது ஆர்டர் செய்தாலும் சிக்கன் கருகிப்போனதாகவோ அல்லது வாயில் வைக்கமுடியாமலோ போய்விடுகிறது? என்னாங்கடா விளையாடுறீங்களா.?

.

38 comments:

very interesting.

Awaiting to see the movie "Nandalala"

 

நந்தலாலா எப்பதான் ரிலீஸ் ஆஹுதாம்?

 

ஏ..யாருப்பா அது? சொல்லவே இல்ல...

 

சூப்பரு!

அவரோட அடுத்தபடத்துக்கு 50 வயது பெரியவர்தான் ஹீரோ என்பதால், அதுக்கு வாய்ப்பு கேட்டு போன மேட்டர் என்ன ஆச்சு அதை சொல்லும் ஒய்!

 

//நர்சிம் said...
ஏ..யாருப்பா அது? சொல்லவே இல்ல...
//

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல:))

 

அந்த இளம் பதிவரை, நடிப்பில் அனுபவமிக்கவரை,கூட அழைத்துச் சென்றால் அந்த நல்ல இயக்கனுரும் இந்த இளம் பதிவருக்காக ஒரு காதல் கதையோ, ஆக்‌ஷன் கதையோ எடுத்து சாதாரண இயக்குனராகிவிடும் ஆபத்திருப்பதை உணர்ந்து சாமார்த்தியமாக கழட்டி விட்டுப் போனதையும் யாமறிவோம். நல்லாருங்க மக்கா...

 

எல்லோரும் அந்தப் படத்தை பற்றிய எதிர்பார்ப்பைக் கூட்டுகின்றனர். முதலில் கமல் அப்புறம் சாரு வரிசையில் இப்போது ஆதி

 

//நாங்கள் சிலாகித்த அந்தப்படம் 'அஞ்சாதே'//


நாங்கள்

 

’ஒரு முறை சென்னையில் இல்லாதது எனக்கு வருத்தம்’ என்று நான் சொன்னதுக்கு மேடை கோணலா என்று கேட்டீர்கள் ஆதி. நினைவிலிருக்கிறதா?

இதுபோன்ற சந்திப்புகள் நமக்குள் தரும் உத்வேகம், உற்சாகம் ஆகியவைகளைத்தான் நான் மிஸ் செய்கிறேன்.

அன்றைக்கு நீங்கள் அழைத்துச் சொன்னபோதுகூட பொசுங்கிப் போனது அதனால்தான்.

கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் - நர்சிம் போல ஒரு வி-வி-ஐ-பியுடன் இவ்வளவு நெருக்கமான நட்பு வைத்திருப்பதற்கு.

@நர்சிம்

முதல் V = வருங்கால)

 

வாழ்த்துக்கள் ஆதி .......

எனக்கும் ஆசை தான் இந்த மாதிரி பிரபலங்களை சந்திக்க வேண்டுமென்று. ஆனால் என்னவோ தெரியவில்லை பல நேரங்களில் ஊனம் அடைந்த உவமையாய் இருந்து விடுகிறது எனது மனது.


அன்று நீங்கள் சொன்னது போல் வரும் காலத்தில் பெரிய எழுத்தாளராக வருவிங்க ....... வெற்றி நிச்சயம்.

 

சொல்றதையெல்லாம் நீங்கதான் சொல்லீட்டீங்களே!வந்ததுக்கு இந்தப் பின்னூட்டம்!

ஹைஎண்ட் விளையாட்டு வீரர்களை தேடிகிட்டு இருக்கிறீங்களாக்கும்:)குழந்தைகள் கூடவே ஜெயிக்க முடியலை,இதுல ஹைஎண்ட் வேற!நான் ஆட்டத்துக்கு வரலை.

 

இந்த மாதிரி நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

 

எப்ப வருதாம் நந்தலாலா???

 

சரி நடத்துங்க!சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்!

 

தலைப்புலேயே ச்ஸ்பென்ஸை உடைச்சுட்டு அப்பறமெதுக்கு பதிவுல சஸ்பென்ஸ் மாதிரியே கொண்டு போயிருக்கீங்க அங்கிள்..?

 

ந‌ல்ல‌தொரு அனுபவ‌மாக‌ இந்த‌ ச‌ந்திப்பு அமைந்திருக்கும் என்று

ஒரு எழுத்தாளனின் வீடு மட்டுமே இப்படியிருக்கும் என்று மிஷ்கினின் வீட்டிலில்
உலக இலக்கிய புத்தகங்கள் இறைந்து கிடைப்பதைப் பற்றி சாரு நிவேதிதா சிலாகித்து
எழுதிய ஒரு பதிவை படித்திருக்கிறேன்.

மேலும் ந‌ந்த‌லாலா பட‌ம் ப‌ற்றியும் மிகுந்த‌ எதிர்பார்ப்பு இருக்கிறது.

 

ஸாரி, மறந்துவிட்டேன்.. ஒரு முக்கிய பின்னிணைப்பு இப்போது இணைக்கப்பட்டுள்ளது.. பார்த்துவிடுங்கள்.

 

ரிஷி,
ராஜகோபால்,
நர்சிம்,

குசும்பன் (நண்பருக்கு 50 வயதெல்லாம் ஆகவில்லை ::-),

கார்க்கி, (எதிர்பாராமல் கிடைத்த வடை)

தர்ஷன் (யோவ்.. நல்லா போடுறீங்கையா வரிசை.. கமல், சாரு, ஆதி.. :-))

முரு, (என்ன நாங்கள்.. நாங்களுமா?)

பரிசல், (பல மைனஸ்களும் உண்டு தோழரே.!)

மேவீ (என்னா மாதிரி கூவுறான்யா..:-)

நடராஜன், (அப்படித்தான் அட்டண்டன்ஸ் ரொம்ப முக்கியம்)

ஷங்கர்,
அமுதா,
அருணா,

ராஜு (நாயமான கேள்வி, ஹிஹி.. முதலில் வேறு தலைப்பு வைத்திருந்தேன்),

செய்யது (சரியாக சொல்லியுள்ளீர்கள், பதிவில் நான் குறிப்பிடத்தவறிய விஷயம்)

 

//ஆர்வமே (Passion) தொழிலாகவும் நேர்கையில் வரும் குதூகலத்தை நேரிலேயே சற்று பொறாமையுடன் கண்டுகளித்தோம்//

ரொம்ப சரி

பகிர்வும் சுவாரஷ்யம் தான்

ராஜூ சொன்னது போல் தலைப்பை மாற்றியிருக்கலாம்.

 

ஜி..அடுத்த நாளே முழு மேட்டரும் எங்களுக்குத் தெரிஞ்சுருச்சு!

அதிகாலை 3 மணி ஆயிடுச்சாமே!

மிஷ்கின் ஒரு அற்புதப்படைப்பாளி !
மிகப்பெரிய வாசிப்பாளர்.....திரு.சச்சிதானந்தத்தின் சிஷ்யர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்பவர்!

 

//முதலில் கமல் அப்புறம் சாரு வரிசையில் இப்போது ஆதி//

கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆயிடுச்சா?

படம் இப்போதைக்கு வெளிவராதுன்னு சொல்றாங்க. பாவம் தமிழ்நாட்டுல் வாழும் உலக சினிமா ரசிகர்கள்..

 

நுண்ணரசியலா பண்றே.? கமலை கழுதை என்று சொன்னால் நான் விஜயை எருமைன்னு சொல்லுவேன்.. ஹிஹி.. எப்பூடி.?

 

நன்றி மண்குதிரை, சுரேகா.!

 

நந்தலாலா ஓபனிங் எப்படி இருக்கு தல ?

 

மிஷ்கின் - எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது..
அஞ்சாதே”யில் வித்தியாசமான நடன அசைவுகள் குறித்து பேசினீர்களா..?

 

மேவீ (என்னா மாதிரி கூவுறான்யா..:-)

அருமையான டைமிங்...

 

ஹ்ம்ம்... கொடுத்து வெச்சவங்கப்பா...

பல்லு இருக்கறவங்க எல்லாம் பக்கோடா சாப்புடறீங்க.:)))

 

//ஒரு முக்கிய பின்னிணைப்பு : மிஷ்கின் பின்னிரவில் அஞ்சப்பரில் இருந்து தந்தூரி சிக்கன் வரவழைத்து உபசரித்தார். அவ்வளவு டேஸ்டியாக இருந்தது. அதெப்படி நாம் எப்போது ஆர்டர் செய்தாலும் சிக்கன் கருகிப்போனதாகவோ அல்லது வாயில் வைக்கமுடியாமலோ போய்விடுகிறது? என்னாங்கடா விளையாடுறீங்களா.?// போ டா

சொந்தமா காசு கொடுத்து சாப்பிட்டா நல்லா இருக்காதோ ?

நந்தலாலா பற்றி சாரு பதிவுல பிரமிச்சு எழுதி இருந்தாரு, நல்லா இருக்கும் என்று எதிர் பார்க்கிறோம்.

 

//ஆர்வமே (Passion) தொழிலாகவும் நேர்கையில் வரும் குதூகலத்தை நேரிலேயே சற்று பொறாமையுடன் கண்டுகளித்தோம்.//

பெரிய பெருமூச்! :)

 

உங்க நண்பர் ஹீரோ சான்ஸ் கேட்டு போகும் போது பெருசுங்களை கூட்டிட்டு போனா தான் யூத்தா தெரிவோம்னு உங்கள கூட்டிட்டு போனதா சொல்றாங்களே... அது உண்மையா ஆதி???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

 

"ஆதிமூலகிருஷ்ணன் said...


மேவீ (என்னா மாதிரி கூவுறான்யா..:-)"


ithukku thaan feelings of indiavaga irukkum pothu cmd poda koodaathu nnu solarathu....

anjapar la avar order panninathu or velai coporate booking la irukkumo.....

sorry enakku details theriyathu..


ponathuku freeya chicken sappitachu...hmmm

avarukum antha nadigaikkum en relation nnu kettingalaaa

 

மிஷ்கின் ஒரு நலல் ஸ்கிரிப்ட் ரைட்டர்.. தலைவரே.. அதற்கு அவரின் படங்களே சாட்சி.. அஞ்சாதேவை முதல் காட்சியை பார்த்துவிட்டு என் உதவி இயக்குனர்களுக்கெல்லாம் டிக்கெட் போட்டு கூட்டி போய் பார் எப்படி ஒரு திரைக்கதையை அழகாய் விரிக்கிறான் என்று சிலாகித்த படம்..

 

{எனக்கு கமர்ஷியல் பிடிக்கும்தான். ஆனால் கமர்ஷியல் என்ற போர்வையில் இப்போது சில தமிழ்சினிமா இயக்குனர்கள் பண்ணிக்கொண்டிருக்கும் அராத்து வேலைகள் சுத்தமாக பிடிப்பதில்லை. எனக்கு இலக்கியம் பிடிக்கும்தான். ஆனால் மிக ஆழமாக இருக்கும், அல்லது போலிகளை இனம்காணமுடியாத முன், பின் நவீனத்துவ இலக்கியங்களை பிடிப்பதில்லை. ஏனெனில் அது புரிவதில்லை. எழுத்தோ, சினிமாவோ என் புரிதலுக்கு உட்பட்ட, அழகியலுடன் கூடியவற்றையே நான் பெரிதும் விரும்புகிறேன். அவையே என்னளவில் இலக்கியம் ஆகின்றன.}

சேம் பிளட்...

 

என்ன ஜி..

எல்லோரும் "நந்தலாலா" 'வை இப்படி கொண்டாடுகின்றீர்கள்.. பார்க்கவேண்டும் என்ற ஆவல் கூடிகொண்டே போகிறது.. என்ன தான் பிரச்சினை.. எப்ப வெளிவருகிறதாம்..

 

தந்தூரி சிக்கன்...இதுக்கும் மிஷ்கின் பற்றிய பில்ட் அப்-க்கும் ஏதோ சம்பந்தம் இருக்குற மாதிரி தெரியுதே..ஹீ ஹீ..

பதிவு சூப்பர்..நந்தலாலா-வுக்கு waiting.