I Promise..

சிறிய சாலை விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நண்பரும் சக பதிவருமான பரிசல்காரன் விரைந்து குணம்பெற வாழ்த்துவோம். நெற்றியில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. பிறவகையில் பரிசல் நலமுடன் உள்ளார். நண்பர்கள் பதற்றம் கொள்ளத்தேவையில்லை.

இதே வேளையில் டூவீலர், கார்கள் பயன்படுத்தும் அனைவரும் பாதுகாப்பின் அவசியத்தை நினைவுகூர்வோம். விபத்துகள் கொடுமையானவை. அவை நேர்ந்தபின் நம்மை திருத்திக்கொள்ள வாய்ப்புகளே கிடைக்காமல் போகலாம்.

*தவறாது ஹெல்மெட் அணியுங்கள்.
*சாலையின் மீது விழிப்புடன் கவனமாக இருங்கள்.
*அதிக சோர்வில் இருக்கும் போது வாகனங்களை இயக்காதீர்கள்.
*தவறாது சீட் பெல்ட் அணியுங்கள்.
*சாலையின் போக்குவரத்தை உணராத வண்ணம் ஹெட்போன்களை உபயோகிக்காதீர்கள். கார்களிலும் கூட இசை பொழுதுபோக்குக்காக மட்டுமே இருக்கட்டும். இசையில் லயிக்க சாலை சிறந்த இடமல்ல.
*மதுவருந்திவிட்டு வண்டியை இயக்காதீர்கள்.
*தகுந்த வேளைகளில் வண்டியை சர்வீஸ் செய்து கன்டிஷனாக வைத்திருங்கள்.
*கண்டிப்பாக செல்போனைத் தவிருங்கள்.

I Promise.. நான் மேற்குறித்த விதிகளை கடைபிடிக்கிறேன்.

.

20 comments:

*சாலையின் போக்குவரத்தை உணராத வண்ணம் ஹெட்போன்களை உபயோகிக்காதீர்கள். கார்களிலும் கூட இசை பொழுதுபோக்குக்காக மட்டுமே இருக்கட்டும். இசையில் லயிக்க சாலை சிறந்த இடமல்ல.///

கார்க்கி பாவா, படிக்கிறீங்களா?

 

திருஷ்டி பட்டிருக்கும்.

சீக்கிரம் குணமடைந்து வர பிரார்த்தனைகள்

 

நல்ல பதிவு. நான் கூட மேலே சொன்னவைகளை கடை பிடிக்கிறேன்.
முடிந்தவரை ஒவ்வொருநாளும் நான் காணும் ரேஷ் டிரைவர்ஸ்க்கு
இந்த விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தி வருகிறேன்.

 

10 commentments !( its for social life not for religious)

 

Get well soon பூங்கொத்து பரிசலுக்கும் , பதிவுக்கான பூங்கொத்து உங்களுக்கும்!

 

பிரார்த்தனைகள்

 

everybody has to keep it in mind..

nice post

 

செல்வேந்திரனின் ஒரு பழைய பதிவு ஞாபகம் வருது..

 

நானும் சொல்கிறேன்... I Promise..

 

நானும்...

பரிசலின் விபத்து பற்றி Buzzல் படிச்சப்போ சும்மா யாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சேன். விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்

 

ஒ விபத்து நெஜம்தானா அப்ப. பரிசல் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

 

Get well soon Parisal!!!

Gud work Aathi...

 

அத்தோட வலக்கையில் ஸ்டீயரிங்கை பிடித்துக்கொண்டே இடக்கையில் டச் ஸ்கீரினில் நம்பரை நோண்டப்படாது.

 

Seekiram vaanga parisal..
Get well soon

 

அனைவருக்கும் நன்றி. இதைப் படிப்பவர்களில் சிலராவது இந்த உறுதிமொழிகளை மனதில் கொண்டால் அது வெற்றி.

 

//நான் மேற்குறித்த விதிகளை கடைபிடிக்கிறேன்.//

நல்ல விஷயம் ஆதி. நண்பர்களையும் உரிமையுடன் கண்டித்துப் பின்பற்றச் செய்ங்க.