விண்ணைத்தாண்டி வருவாயா -விமர்சனம்

vinnaithandi varuvaya Pictures, vinnaithandi varuvaya Picture Gallery, vinnaithandi varuvaya, Hot vinnaithandi varuvaya Photos, vinnaithandi varuvaya Images

ஒரு அழகான காதல்கதை என்பதைவிடவும் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு அழகான காதல் எனலாம். டுப்பு டுப்பு எனும் துப்பாக்கிச் சத்தமில்லாமல் கௌதமின் முதல் படம் என்று நினைக்கிறேன். கௌதம் படம் என்பதால் எந்த நிமிடமும் சிம்பு துப்பாக்கியை எடுத்துவிடுவாரோ என்று பயந்துகொண்டேயிருந்தேன். எந்த கமர்ஷியல் கோமாளித்தனங்களும் இல்லாத அழகிய காரெக்டரில் சிலம்பரசன், நிறைவு. அப்படியும் 10 பேரை ஒரே குத்தில் வீழ்த்தும் சண்டைக்காட்சி இருக்கிறது. அது கமர்ஷியலில் வராதா என்றேல்லாம் கேட்கக்கூடாது. அதெல்லாம் டிஃபால்ட். (என்னதான் சிம்பு நிறைவாக செய்திருந்தாலும் இந்த காரெக்டருக்கு தனுஷ் இன்னும் பொருத்தமாக இருந்திருப்பாரோ என எண்ணிக்கொண்டே வெளியே வந்தேன்).

திரிஷா ஏற்கனவே என் ஃபேவரிட் என்பதால் மட்டுமல்ல படம் முழுக்க ரசனையான கோணங்களில் அவர் நிறைந்திருப்பது பர்சனலாக எனக்கு ஆக திருப்தி.

இரண்டு அழகான, மெச்சூர்டான நபர்களுக்கிடையே காதல். மெச்சூர்ட் என சொல்லியாகிவிட்டது. அவர்கள் எப்படி, வீடு எப்படி, சூழல் எப்படி என்பதெல்லாம் புரிந்த அதையும் மீறி காதலை வளர்த்தெடுத்த ஜோடி என்றுசொல்லியாகிவிட்டது. அப்புறம் அவர்களுக்கிடையில் பிரச்சினை வரவேண்டுமே.. என்ன செய்யலாம்.? எந்தக்காரணமும் இல்லாமல் திரிஷா சொந்தமாக ஏதேதோ திங்க் பண்ணி இந்தக்காதல் சரிப்படாது என்று சொல்லி சிம்புவுக்கு பல்பு கொடுத்துவிட்டு போய்விடுகிறார். என்னாங்கடா இது என்கிறீர்களா? அப்படித்தான் தோன்றியது எனக்கும். ஒருவேளை பெண்கள் இப்படித்தான் லுச்சாத்தனமாக நடந்து கொள்வார்கள் என இயக்குனர் சொல்கிறாரோ என்னவோ? ஹிஹி.. அதற்கும் கொஞ்சம் தைரியம் வேண்டும்தான். அப்புறம் என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க எதுக்கும் ஒருவாட்டி படம் பார்த்துடுங்க.

சஸ்பென்சை உடைப்பதாக இருந்தாலும் வேறு வழியில்லை, ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும். முன்பெல்லாம் படங்களில் ஹீரோவை ஏமாற்ற ஹீரோயினின் அப்பா அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்லி விட அதை நம்பி ஹீரோவும் ஏமாந்து சோகமாகித் திரிவார். நாமும் அடடா, வட போச்சே.. கதை அடுத்து எப்படி போகப்போகுது, வேறு ஹீரோயின் யாராவது வருவாங்களா என்று ஆவலோடு இருப்போம். கிளைமாக்ஸில்தான் ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகவில்லை என்ற உண்மை தெரியும். அப்பா பொய் சொல்லியிருக்கிறார் என்று லாஜிக் சொல்லிவிடுவார்கள்.

இந்தப் படத்திலும் விசாரித்துவிட்டு வந்த ஹீரோவின் தங்கை, ‘அவர் அப்பாவிடம் விசாரித்தேன். கல்யாண ஆல்பமெல்லாம் பார்த்தேன், ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகிவிட்டது’ என்று சொல்லிவிடுகிறார். ஹீரோவுடன் சேர்ந்து நாமும் அடடா, வட போச்சே என்று மேற்சொன்னது போல கிளைமாக்ஸ் வரை சுற்றிக்கொண்டிருக்க, கிளைமாக்ஸில் வந்து ஹீரோயின் ஹிஹி எனக்கு கல்யாணம் ஆகவில்லை என்கிறார். அப்புறம் அந்தக் கல்யாண ஆல்பம் என்ன ஆயிற்று.? அப்பாவைப்போல ஹீரோவின் தங்கையும் பொய் சொல்லியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளவேண்டியதுதான். வேற வழி? இனி வருங்காலங்களில் கல்யாண ஆல்பம், வீடியோ, பிரக்னென்ஸி செக்கப்எ ல்லாம் காண்பித்துவிட்டு கடைசியில் ஹிஹி ஹீரோயினுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. அப்பா, தங்கை, வீடியோகிராஃபர், வாட்ச்மேன், லேடிடாக்டர் எல்லோருமா சேர்ந்து பொய் சொல்லியிருக்காங்க என்று சொல்லிவிடுவார்கள் என நினைக்கிறேன். பல்பு வாங்குவது நமக்கெல்லாம் புதிதா என்ன.?

பளீரிடும் வண்ணங்கள் இல்லாமல் பசுமை, வான்நீலம் என படம் முழுதுமே மென்மையான டோனில் அழகு ததும்ப படமாகியிருக்கிறது. முக்கால்வாசிப் படம் வரை வரும் அழகான காதல் காட்சிகளுக்காகவும், ஒரு அழகிய விஷுவல் ட்ரீட்டுக்காகவும் நன்றி கௌதம் மேனன்.!

பிற்சேர்க்கை :
படத்தின் முடிவு குறித்த குழப்பத்துடனே இந்த விமர்சனப்பதிவு அமைந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. நான் பார்த்த திரையரங்கில் குறித்த சில நிமிடங்கள் கட் செய்யப்பட்டதாகவே என்னால் முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது. மீண்டும் மீண்டும் வேறு வேறு திரையரங்குகளில் பார்த்து உண்மைநிலையை அறிந்து அறிவை வளர்த்துக்கொள்வது ரொம்ப அவசியம்.. என்பதால் பார்த்துவிட்டு முடிந்தால் பின்னர் அப்டேட் செய்கிறேன்.. ஹிஹி. திரிஷா திருமணம் செய்துகொண்டாரா (அட படத்தில்ங்க..) இல்லையா என்பது குறித்த குறிப்பிட்ட இரண்டு பாராக்களையும் இந்தப்படத்துக்குரியதாக கருதாமல் பொதுவான தமிழ்ப்படங்கள் குறித்த ஒரு ஜோக்காக கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். சுபம்.!

.

46 comments:

படத்தை ஒரு முறை பார்க்கலாம்...

இன்னிக்கி நிலமையில் இதுவே ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் தான்...

திரிஷாவுக்குத் திருமணம் ஆனது உண்மையே! அந்த இடத்தில் டைரக்டர் நம்மை அதாவது நம் கண்களை ஏமாற்றி பின்னர் உண்மையை திரிஷா மூலமாக சொல்ல வைக்கிறார். எதற்கும் நீங்களும் இன்னொரு முறை பார்த்து விடுங்கள்.

//அழகிய காரெக்டரில் சிலம்பரசன்,//

இதுதானே அவர் ஒரிஜினல் பெயர். மறந்தே போச்சு. காதல் பிடிச்சவங்களுக்கு பிடிக்குமோ. இன்னும் படம் பாக்கலை.

//டுப்பு டுப்புஎனும் துப்பாக்கிச் சத்தமில்லாமல் கௌதமின் முதல் படம் என்று நினைக்கிறேன். //

மின்னலே?!

ஆதி
தங்கை கல்யாணம் ஆகி விட்டது என்று சொல்வது நிஜம் த்ரிஷா கல்யாணம் ஆகவில்லை என்று சொல்வது சினிமா
பொதுவாக கௌதமின் கதாநாயகன் Intellectual ஆக இருப்பார்கள். இதற்கு ஒரு அடுத்த வீட்டுப் பையன் தோற்றமுள்ள அப்படியே நடிக்கும் தனுஷ் சரியா இருப்பாரா?

"அப்புறம் அந்தக் கல்யாண ஆல்பம் என்ன ஆயிற்று.? அப்பாவைப்போல ஹீரோவின் தங்கையும் பொய் சொல்லியிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளவேண்டியதுதான். வேற வழி?"

அண்ணே ....நீங்க படத்தை முழுசாய் பார்த்திங்களா ?????

இல்லாட்டி அதற்குள் நான் சொன்ன மாதிரி தியேட்டர் OPERATOR EDITING வேலையை செய்துவிட்டரா ??????

ஒரு வேளை பாதியில் பொறுமையில்லாமல் வெளியே ஓடி வந்துடின்களா ??

ஆதிண்ணே த்ரிஷாவுக்கு கல்யாணம் ஆனது உண்மைதான்.நீங்க க்ளைமாக்ஸ்ல ஃபுல்லா பார்க்காம வந்துட்டீங்கனு நினைக்கிறேன்.

கிளைபேக்ஸை பார்த்தீர்களா? இல்லையா? :-) அடிவாங்க போறிங்கண்ணா...

காக்க காக்க திரைப்படத்தில் ஜோதிகா புடவையில் நடப்பது கவிதை மாதிரி இருக்கும்.

திரிஷாவும் நடக்கிறார் பாருங்கள்! சிம்பு சொன்ன மாதிரி Ugly Walk!!

//காண்பித்துவிட்டு கடைசியில் ஹிஹி ஹீரோயினுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. //

உண்மையா படம் பார்த்தீங்களா? நீங்க க்ளைமேக்ஸ் பார்க்காம அவசரகதியில ஓடி வந்தப்பவே படம் எப்படி தெரியுது :)

dhanush? nalla comedy lines huh... i like simbu

madhumidha1@yahoo.com

இன்னாபா இது இப்பிடி போட்டு கும்முறீங்கோ..?

படத்த முளுசா பாத்துட்டுதான் வந்தேன். தியேட்டர் கட் எதுவும் இருந்ததா தெரியவில்லை, இப்போ நான் சொல்வது கரெக்டா பாருங்கள்.

யுகேயோ/ யுஎஸ்ஸோ கிளைமாக்ஸில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. அப்போது சிம்பு ரோடில் செல்லும் திரிஷாவை பார்க்கிறார். ரெண்டு பேரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து பேசுகிறார்கள். சிம்பு இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பதாக இவர் மீது ஃபீலிங்ஸ் விடுகிறார். உடனே இவர் தனக்கும் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்ல இருவரும் கட்டிப்பிடித்துக்கொள்கிறார்கள்.

நாட்டாம.. நா சரியாத்தான சொல்றேன்?

அப்புறம் அவர் எடுக்கும் சினிமா / லைவ் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி சில காட்சிகளுடன் படம் முடிகிறது.

இப்படித்தான் நான் புரிந்தேன். ஏதும் மிஸ்டேக் இருக்குதா.? யாராவது விளக்கவும்.! :-))

//இப்படித்தான் நான் புரிந்தேன். ஏதும் மிஸ்டேக் இருக்குதா.? யாராவது விளக்கவும்.! :-))//

கிழிச்சுது! :))))

அது அவர் எடுக்கும் படத்தோட முடிவு. அதை சிம்பு,த்ரிஷா வாயிலாக காட்டியிருப்பார். உண்மையில் திரிஷாவுக்கு கல்யாணம் ஆகியிருக்கும். இதெல்லாம் “film by karthick" என்று டைட்டில் போட்ட பிறகு சிம்புவும், த்ரிஷாவும் பேசும் பொழுது தெரியும் :)

தெலுங்கிலும் நாகி பையன் நாக சைதன்யா நடிப்பில் வந்திருக்கு.(என்ன மாயம் செய்தாயோன்னு பேரு) தெலுங்குல பாப்போமா, தமிழ்ல பாப்போமான்னு மீ த யோசிச்சிங்.

பசங்க பரிட்சை முடியட்டும் அப்புறம் பாக்கறேன்.

யுகேயோ/ யுஎஸ்ஸோ கிளைமாக்ஸில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. அப்போது சிம்பு ரோடில் செல்லும் திரிஷாவை பார்க்கிறார். ரெண்டு பேரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து பேசுகிறார்கள். சிம்பு இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பதாக இவர் மீது ஃபீலிங்ஸ் விடுகிறார். உடனே இவர் தனக்கும் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்ல இருவரும் கட்டிப்பிடித்துக்கொள்கிறார்கள்.

அப்புற‌ம் போய் க‌ல்யாண‌ம் செய்து கொண்டு த்ரிஷாஅப்பா முன்னாடி போயி நிக்கிறாங்க‌. அப்போ A FILM BY KARTHICK அப்டினு என்ட் கார்டு போடுவாங்க‌.
அப்புறம் பார்த்தால் சிம்பு டைரக்ட் பண்ண படத்த த்ரிஷாவோடு பார்த்துட்டு இருப்பாரு. உண்மையில் த்ரிஷாவுக்கு கல்யாணாம் ஆகிருக்கும் ஆனால் சிம்பு படத்துல கார்த்திக் ஜெர்சி ஜோடி சேர்ந்த மாதிரி காட்டி இருப்பாரு.

"இப்படித்தான் நான் புரிந்தேன். ஏதும் மிஸ்டேக் இருக்குதா.? யாராவது விளக்கவும்.! :-))"

இலக்கியவாதிகள் ஒரு விஷயத்தை தப்பாக அல்லது அரைகுறையாக தான் புரிந்து கொள்வோம் ன்னு சொல்லாமல் சொல்லுறிங்களா ???

ரைட் பார்துடுறேன்.

கொளப்பம்ஸ் ஆஃப் இன்டியா.. ஹிஹி நாந்தான் பல்பு வாங்கிட்டனா? நீங்க சொல்ற காட்சியின் போதே ரசிகர்கள் கூச்சலோடு எழுந்துவிட்டதால் வட போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.

உண்மையான கிளைமாக்ஸ் வரமுதல், கிளைமாக்ஸ் வந்துட்டுது எண்டு நினைச்சு வெளிய வந்துட்டீங்களா.. ம்ம்ம்.. :))

படத்தைத்தான் சொல்றேன்.

//இன்னாபா இது இப்பிடி போட்டு கும்முறீங்கோ..?

படத்த முளுசா பாத்துட்டுதான் வந்தேன். தியேட்டர் கட் எதுவும் இருந்ததா தெரியவில்லை, இப்போ நான் சொல்வது கரெக்டா பாருங்கள்.

யுகேயோ/ யுஎஸ்ஸோ கிளைமாக்ஸில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. அப்போது சிம்பு ரோடில் செல்லும் திரிஷாவை பார்க்கிறார். ரெண்டு பேரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து பேசுகிறார்கள். சிம்பு இன்னும் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பதாக இவர் மீது ஃபீலிங்ஸ் விடுகிறார். உடனே இவர் தனக்கும் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்ல இருவரும் கட்டிப்பிடித்துக்கொள்கிறார்கள்.

நாட்டாம.. நா சரியாத்தான சொல்றேன்?

அப்புறம் அவர் எடுக்கும் சினிமா / லைவ் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி சில காட்சிகளுடன் படம் முடிகிறது.

இப்படித்தான் நான் புரிந்தேன். ஏதும் மிஸ்டேக் இருக்குதா.? யாராவது விளக்கவும்.! :-)) //

நாசமாப் போச்சு.

//கல்யாண ஆல்பமெல்லாம் பார்த்தேன், //

கல்யாண ஆல்பம்னு சொல்ல மாட்டா....
புருசனோட இருக்கிற படத்தை காட்டினார் என்று
சொல்லுவாள் என்று நினைக்கிறேன்.....

so, தாம்பரம் வித்யாவில் இந்த படத்தினை பார்க்க கூடாது என்று மட்டும் புரிகிறது

படத்தை ஒருமுறை ஒழுங்காகப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதவும். த்ரிஷாவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்று தான் படம் முடிகிறது. இதைதான் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் முந்திரிக் கொட்டை என்பார்கள். எதற்கும் இதை ஒருமுறை படித்துவிடுங்கள்.
http://ponnusamypalani.blogspot.com/2010/02/blog-post_26.html

படத்தை ஒருமுறை ஒழுங்காகப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதவும். த்ரிஷாவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது என்று தான் படம் முடிகிறது. இதைதான் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்தில் முந்திரிக் கொட்டை என்பார்கள். எதற்கும் இதை ஒருமுறை படித்துவிடுங்கள்.
http://ponnusamypalani.blogspot.com/2010/02/blog-post_26.html

படத்தின் முடிவு குறித்த குழப்பத்துடனே இந்த விமர்சனப்பதிவு அமைந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. நான் பார்த்த திரையரங்கில் குறித்த சில நிமிடங்கள் கட் செய்யப்பட்டதாகவே என்னால் முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது. மீண்டும் மீண்டும் வேறு வேறு திரையரங்குகளில் பார்த்து உண்மைநிலையை அறிந்து அறிவை வளர்த்துக்கொள்வது ரொம்ப அவசியம்.. என்பதால் பார்த்துவிட்டு முடிந்தால் பின்னர் அப்டேட் செய்கிறேன்.. ஹிஹி. திரிஷா திருமணம் செய்துகொண்டாரா (அட படத்தில்ங்க..) இல்லையா என்பது குறித்த குறிப்பிட்ட இரண்டு பாராக்களையும் இந்தப்படத்துக்குரியதாக கருதாமல் பொதுவான தமிழ்ப்படங்கள் குறித்த ஒரு ஜோக்காக கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். சுபம்.!

முரு, முபாரக், அம்மிணி, சென்ஷி (கரெக்டா கிடுக்கிப்பிடி போடுவீங்களே, ரொம்ப முக்கியம்), தர்ஷன் (அதனால்தான் சொன்னேன்), அருணா, மேவீ, ஷிவா, முரளி, நிலாரசிகன் (ஒப்புக்கொள்ளமுடியாது, திரிஷாதான் பெஸ்ட்), ஸ்வீட், ஆதவன் (பில்ம் பை கார்த்திக்குக்கும், பில்ம் பை கௌதமுக்கும் இடையே காட்சி ஒன்றுமில்லை என்பதனால்தான் இந்தக்குழப்பம், சரி விடுங்க), ரோமியோ, மதுவதனன், நர்சிம் (அவ்வ்வ்), ஜெட்லி, அமுதா (கரெக்ட்), பொன்னுசாமி, செல்வா..

அனைவருக்கும் நன்றி.!!!

எனக்கு தெரிந்து அஃபீஷியலாய் எங்கும் எடிட் செய்யப்படவில்லை.. ஏன் என்றால் வெற்றியில் இன்று கூட அதே க்ளைமாக்ஸ்தான்

நல்லா இருக்கா இல்லையா ?

climax a miss pannitinga boss

நன்றி ரிஷி, டிவா, கேபிள் (யோவ், நான் வித்யாவுல பாத்தேன்யா.. நல்லா கேட்டுப்பாருங்கையா.. ஒருத்தன் மாட்டுனா வச்சு மொக்கிருவீங்களே.).!

படம் பார்க்கறதா வேண்டாமா?! படத்தோட கதையா இது?படம் பார்த்த கதை.

"shortfilmindia.com said...
எனக்கு தெரிந்து அஃபீஷியலாய் எங்கும் எடிட் செய்யப்படவில்லை.. ஏன் என்றால் வெற்றியில் இன்று கூட அதே க்ளைமாக்ஸ்தான்"

திருச்சி ல கூட இதே கிளைமாக்ஸ் தான் .....

தாம்பரம் வித்யாவில் இருப்பது digital projection ....அதனால் அங்கு EDIT செய்ய முடியாது என்று நினைக்கிறேன்

அப்போ பார்த்துவிட வேண்டியதுதான்.

தல அடிக்கடி எழுதுங்க.

/டுப்பு டுப்புஎனும் துப்பாக்கிச் சத்தமில்லாமல் கௌதமின் முதல் படம் என்று நினைக்கிறேன்/

தலைவா...மின்னலே கூட டுப்பு டுப்புஎனும் துப்பாக்கிச் சத்தமில்லாமல் வந்த கௌதமின் படம் தான்.

ஆதி,

சமீபமாக (அந்த சமீபம் அல்ல, ஒரு இரண்டு மாதமாக) வரும் வலை விமர்சனங்கள் எல்லாம் "படம் பாத்துடுங்க", " தியேட்டருக்கு சென்று பார்க்கவும்" என்பதாக வருவதற்கு ஏதேனும் விஷேஷ காரணங்கள் இருக்கிறதா? ;-)

வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/

// மு.சீனிவாசன் said...
/டுப்பு டுப்புஎனும் துப்பாக்கிச் சத்தமில்லாமல் கௌதமின் முதல் படம் என்று நினைக்கிறேன்/

தலைவா...மின்னலே கூட டுப்பு டுப்புஎனும் துப்பாக்கிச் சத்தமில்லாமல் வந்த கௌதமின் படம் தான்//

அதுவும் கெளதமின் முதல் படம்தான் :))

சினிமா விமர்சனம் பண்ணுவதற்கு முதலில் நல்ல சினிமா ரசிகனாக இருக்கணும் :). எப்படி பதிவு போடலாம்னு நினைத்துக் கொண்டே படம் பார்த்து விட்டு 'மீ த ஃபர்ஸ்டு'னு போட்டா, இப்படித்தான் 'சீதைக்கு ராமன் சித்தப்பா' கதை ஆகிவிடும். ஹா ஹா ஹா - உனக்கு நல்லா வேணும்யா

அனுஜன்யா

ஆதி,

விமர்சனம் வழக்கம் போல...

க்ளைமாக்ஸ் தான் சரியில்லை..

அரசியல்ல இதெல்லாம் சகஜம்..

BETTER LUCK NEXT TIME...

திரிஷா ஏற்கனவே என் ஃபேவரிட் என்பதால் மட்டுமல்ல படம் முழுக்க ரசனையான கோணங்களில் அவர் நிறைந்திருப்பது பர்சனலாக எனக்கு ஆக திருப்தி. //

உங்க தங்கமணி ஃபோன் நம்பர் கொஞ்சம் குடுங்க.

நேத்துதான் படம் பார்த்தேன். அரைமணிக்கு மேல் பார்க்க முடியலை. வெறுத்துப்போச்சு.

என்ன எல்லாரும் தலையில் தூக்கிவச்சு
ஆடறாங்களேன்னு ஆர்வமா இருந்தேன்...ப்ச்...

சிலம்பரசன், ப்ரண்ட்ஸா இருக்கலாம் னு சொல்லிக்கிட்டே அத்து மீறி கன்னத்தைத் தடவறதும், முத்தம் கொடுக்கறதுமா இருந்தது பேஜாராப் போச்சு.

நம்மூர் இளைஞர்கள் இதுதான் ஃப்ரெண்ட்ஷிப்ன்னு 'புரிஞ்சுக்கிட்டு' ஆடாம இருக்கணுமேன்னு புதுக் கவலை எனக்கு.

காதல் அதுவும் உண்மைக்காதல் என்பது வேற விஷயம். அதை யாருக்கும் சொல்லத்தெரியலை. தெரியவும் தெரியாது. ஏன்னா.... அது தனிப்பட்ட ஒரு உணர்வு. கடவுள் மாதிரி. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் வகை.