கரிகாலன் காலழகு
வேட்டைக்காரன் : ஒரு உரையாடல்
நான்கு நாட்கள் விடுப்பில், ஊர்ப்பயணத்தையெல்லாம் முடித்து காலையில் சென்னை வந்து இறங்கினேன். மீண்டும் அதே ஆஃபீஸுக்கா என்ற மலைப்பில் சலித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் கிளம்பிக்கொண்டிருந்தபோது சரியாக கண்ணனிடமிருந்து போன் வந்தது.
'இன்னிக்கு போலாமா வேட்டைக்காரன்?'
'பாத்துட்டனே'
'ஊருக்குப்போறேன்னு சொல்லிட்டிருந்தயே'
'ஊர்லதான் பாத்தேன்'
'போன வேலையை விட்டுட்டு இந்த வேலையுமா? ஓஹோ.. நீங்கதான் பிளாகராச்சே.. அதுனாலயா?'
'...'
'சரி, விடு அந்தக் கருமத்தை.. படம் எப்பிடி இருந்துச்சு? கத சொல்லு'
'டமால் டுமீல்னு என்கவுண்டர் பண்ற ஒரு போலீஸப்பாத்து விஜயும் போலீஸ் ஆக ஆசைப்படுறாரு.. அவ்ருதான் ரோல் மாடல்'
'அடடே, அப்புறம்?'
'அதுனால காலேஜ் படிக்க சென்னைக்கு வர்றாரு..'
'எதுக்கு?'
'போலீஸாவுணும்ல..'
'ஓஹோ, எங்கேர்ந்து வர்றாராம்? மதுரையா.?'
'இல்லை, தூத்துக்குடி'
'ரொம்ப வித்தியாசமாயிருக்கே.. அப்புறம்?'
'கொஞ்ச நேரம் குறுக்க பேசாம கேட்டின்னா, கதை சொல்றேன்..'
'சரி கோவப்படாத.. சொல்லு'
'அவுரு வண்டில ஏறம்போதே அனுஷ்காவை பாத்து ஜொள்விட்டு அவர் திராட்சைப்பழம் சாப்புடுற அழகுல லவ்வு பண்ண ஆரம்பிச்சுடுறாரு..'
'ஊம்'
'அப்படியே சென்னைக்கு வந்ததும் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கிறாரு'
'காலேஜிக்கு போலியா?'
'இல்ல, பார்ட் டைம்.. படிக்க பைசா வேணும்ல..'
'அப்ப சரி'
'ஆட்டோ ஓட்டுற நேரம்போக மிச்ச நேரம் அனுஷ்கா வீட்ல செட்டிலாகிடுறாரு'
'அதெப்படி சேத்துக்கிட்டாங்க'
'ட்ரெயின்ல அனுஷ்காவோட பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுக்கு உதவி பண்ணுறாரு. அனுஷ்கா ஸ்கூட்டிய கண்டுபிடிச்சு தர்றாரு.. இப்பிடி நிறைய பண்றாரு. இப்பிடி இருக்கும்போது ஒரு வில்லன் ரோட்டுல போற வார பொண்ணுங்களையெல்லாம் தூக்கிட்டு போயிடுவாரு. தட்டிக்கேட்டா வெட்டிப்போட்டுடுவாரு'
மிச்செலின் கண்கள்


******************************
நாளை முதல் மாதக்கடைசி வரை பொங்கலை ஒட்டிய நீள்விடுப்பில் ஊர் செல்லவிருப்பதால் அனேகமாக இணையம் பக்கம் வர இயலாது (நீள்விடுப்பு கண்டு சிலருக்கு காதில் புகை வருவது தெரிகிறது). அதுவரை கடையை காத்தாட விடாமல் பழைய பதிவுகளை படித்து பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும் படி அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். யாரார் பழைய பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான பதிவுகளை குறிப்பிடுகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் பரிசு காத்திருக்கிறது (கண்ணைத் தொடச்சுக்கங்க). சரியாக பிப்ரவரி 1ல் வந்துவிடுவேன். வரும்போது பயணக்கட்டுரைகள், புகைப்படங்கள், குறும்படங்கள் என்று வழக்கமான விருந்துகளுடன் வருவேன் (ஊம்.. திரும்பவும் அழக்கூடாது) என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
நூடுல்ஸ் கதை
தலைப்பில் தேங்காயெண்ணெய் கதை இருப்பதாக பார்த்து வந்தீர்களா? அதை பலமுறை பார்த்துவிட்டதால் ஒரு நூடுல்ஸ் கதை படிக்கலாம் வாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கிறது 'மயில்'?
********************************
11.08.09 காலை 8 மணி.
'காலையில டி.:பன் பண்ண முடியாத நேரத்தில யூஸ் ஆகும், சாய்ந்திரம் வரும்போது நூடுல்ஸ் வாங்கிட்டு வாங்க..'
'சரிம்மா'
11.08.09 மாலை 7 மணி.
'டெய்லி சொல்லணுமாங்க உங்களுக்கு. எப்படி மறக்குது உங்களுக்கு?'
'நாளைக்கு வாங்கிடலாம்மா'
12.08.09 மாலை 7 மணி.
'என்னங்க வாங்கிட்டு வந்திருக்கீங்க.. இது பாஸ்தா, நான் கேட்டது நூடுல்ஸ்.'
'பாக்க அழகா இருந்துச்சு, ஒரு சேஞ்சா இருக்கட்டுமேனு..'
'இத xxx கூட திங்காது'
'சரிம்மா, நா சாப்டுக்கறேன். உனக்கு நூடுல்ஸ் நாளைக்கு வாங்கிட்டு வந்துடறேன்'
13.08.09 மாலை 7 மணி.
'என்னங்க இதைப்போய் வாங்கிட்டு வந்திருக்கீங்க.. 20 ரூபா தண்டம். இதுல காய்கறிலாம் சேந்திருக்குதுனு நினைக்கிறேன். நான் கேட்டது 5 ரூபா பாக்கெட் பிளெய்ன் நூடுல்ஸ்.'
'ஸாரிமா, நாளைக்கு வாங்கிடலாம்'
14.08.08 மாலை 7 மணி.
'என்னங்க இது? வேற பிராண்ட் போய் வாங்கியிருக்கீங்க, நல்லாவேயிருக்காதே.! மேகிதான் நல்லாயிருக்கும்'
'ஸாரிமா, நாளைக்கு வாங்கிடலாம்'
15.08.09 காலை 10 மணி.
'ஏங்க தண்டத்துக்கு நாலு பாக்கெட் வாங்கியிருக்கீங்க. ஒண்ணு போறாதா?'
'என்ன விளையாடுறயா.. நானும் பாத்துட்டேயிருக்கேன். என்ன பண்ணிணாலும் குறை கண்டுபிடிச்சுகிட்டு.. இனிமே எதாவது வாங்கச்சொன்னே ... எதுனாலும் நீயே போயி வாங்கிக்கோ, @#@#&%#@ #$@ #% @#'
'*&^%$#$#% @#@#&%#@ #$@ '
'$#$#% @#@#&%'
'ம்ம்ம்..ஊம்..ம்.. ஹும்'
'இப்ப என்னாச்சுன்னு இப்பிடி ஒப்பாரி வெக்கிறே..'
15.08.09 காலை 11 மணி.
'சாருக்கு மேகி நூடுல்ஸ் எடுத்துக்குடுப்பா, எத்தனை பாக்கெட் சார்.?'
'நூடுல்ஸ் வேணாம்பா.. கருப்பட்டி இருக்குதா?'
'இல்லையே சார்'
'இங்கே வேறெங்க கிடைக்கும்னு தெரியுமா?'
*************
டிஸ்கி : நான் பதிவுலகம் வந்த புதிதில் எழுதிய ஒரு பதிவு இது. ரெகுலராக வரும் வலைகளுக்கும் கூட வரமுடியவில்லை. எதிர்பாராதவிதமாக அலுவலகம், வீடு ரெண்டிலும் கொஞ்சம் பிஸியாகிவிட்டதால் இதை மீள் பதிவாக்கியுள்ளேன்.. பொறுத்துக்கொள்ளவும்.
.
அறுவடைக்காலம்
நுழைவாயிலிலேயே குறுகுறுப்பு தொ
சுந்தரபுருஷன் என்ற ஒரு படத்தில் வடிவேலு திருடனாக
அறுவடைக்குத்தயாரான வயல் போல கண்காட்சி. நெற்சுமையால் தலைதா
ஆனால் திட்டமிட்டபடி என்று நாம் நடந்திருக்கிறோம்? ஒவ்வொரு தெருவாக 'யு' டர்ன் அடித்து அடித்து பாதியை கடப்பதற்குள் பாதி பையை நிரப்பியிருந்தேன். டயர்டாகிவிட்டதுடன் பசி வயிற்றைக் கிள்ளியது. வெளியே வந்து கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சாம்பார் சாதத்தை விழுங்கிவிட்டு பத்து நிமிடம் உட்கார்ந்துவிட்டு இரண்டாவது ரவுண்டை துவக்கவும் சிங்கைப்பதிவர் விஜய் ஆனந்த் மற்றும் கார்க்கி ஆகியோரிடமிருந்து அழைப்பு. முதல் முறையாக விஜயுடன் சந்திப்பு. அவரும் அவரது நண்பரும் நிஜமாகவே கோணிப்பை பிடிக்காத அளவில் புத்தகங்களை அள்ளி வைத்திருந்தனர். மேலும் எறும்பு செல்லும் பாதையை அழித்துவிடுவது போல டீ குடிக்கப்போகலாம், கிழக்கு போகலாம், உயிர்மை போகலாம் என இடது வலதாக, முன்னும் பின்னுமாக என்னை குழப்பிவிட்டு அவர்கள் நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர்.
அதன் பின்னர் திருவிழாவில் தொலைந்த குழந்தைப்போல ஏற்கனவே வந்த பாதையிலேயே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தேன். கூட்டம் பெரும்பாலும் விஐபி பதிப்பகங்களான உயிர்மை, கிழக்கு, காலச்சுவடு, விகடன் ஆகியவற்றையே மொய்த்துக்கொண்டிருந்தது. ஆங்காங்கே சில முக்கிய எழுத்தாளர்களும் கூட்டத்தோடு கூட்டமாய் உலாத்திக்கொண்டிருந்ததை காணமுடிந்தது. பெண்கள் பெரும்பாலும் கோலப்புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் ஸ்டால்களிலும், ஐஸ்கிரீம், பாப்கார்ன் கடைகளிலும், வெளியே காண்டீனுலுமே காணப்பட்டனர் என்று நான் சொல்லவில்லை, கார்க்கி சொன்னான். அதற்கு நான் மத்தியமாக தலையாட்டிவைத்தேன். ஒருவழியாக வழிகண்டுபிடித்து மீத வரிசைகளையும் பார்த்துவிட்டு, பட்ஜெட்டைத்தாண்டி பையையும் நிரப்பிக்கொண்டு அக்கடா (கால்வலியில் கடைசி சில தெருக்கள் சும்மா ஒப்புக்காச்சும் ரன்னிங்கிலேயே பார்த்தேன்) என்று உட்காரவும் பளபளா வெள்ளைச்சிரிப்போடு வெள்ளைச்சட்டையில் அப்துல்லா வரவும் சரியாக இருந்தது. அவரோடு கொஞ்சம் அளவளாவிவிட்டு கிளம்பினேன்.
வாங்கின புத்தகங்களை சொன்னால் மேதைமை வெளிப்பட்டுவிடும் ஆபத்திருந்தாலும் எவ்வளவோ பண்ணிவிட்டோம்.. இதைப் பண்ணமாட்டோமா என்ன.?
சாம்பல் நிற தேவதை : ஜீ.முருகன்
கண்ணாடியில் நகரும் வெயில் : வா.மணிகண்டன்
சிகரங்களில் உறைகிறது காலம் : கனிமொழி
கிளிஞ்சல்கள் பறக்கின்றன : தமிழ் வலைப்பதிவர்கள் தொகுப்பு
மரப்பாச்சியின் சில ஆடைகள் : தமிழ் வலைப்பதிவர்கள் தொகுப்பு
உரையாடலினி : அய்யனார் விஸ்வநாத்
சினிமாவின் மூன்று முகங்கள் : சுதேசமித்திரன்
தாழப்பறக்காத பரத்தையர் கொடி : பிரபஞ்சன்
நாஞ்சில்நாடன் கதைகள் : நாஞ்சில்நாடன்
சூடிய பூ சூடற்க : நாஞ்சில்நாடன்
ரத்தம் ஒரே நிறம் : சுஜாதா
சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் : வா.மு.கோமு
கருவேல நிழல் : பா.ராஜாராம்
அய்யனார் கம்மா : நர்சிம்
பெண்மணம் : கி.ராஜநாராயணன்
கோபல்ல கிராமம் : கி.ராஜநாராயணன்
கோபல்லபுரத்து மக்கள் : கி.ராஜநாராயணன்
பாரதியின் கட்டுரைகள் : பாரதியார்
பாரதியின் கதைகள் : பாரதியார்
இறுதியாக இன்னும் வாசிக்கவில்லையே இந்த பெருநாவலை, காலங்களைக் கடந்து நிற்பதற்கான காரணம் அறியும் ஆவலில்..
பொன்னியின் செல்வன் : கல்கி
.
